தனி வெளிநாட்டு பயணம்: இளவரசர் ஹரியை சந்திக்க மெலேனியா திட்டம்

214

டொராண்டோவில் நடைபெறவிருக்கும் Invictus விளையாட்டு நிகழ்ச்சியின் போது பிரித்தானியா இளவரசர் ஹரியை சந்திக்க மெலேனியா திட்டமிட்டுள்ளார்.

2017க்கான Invictus விளையாட்டு நிகழ்ச்சிகள் கனடாவின் டொரோண்டோவில் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி தொடங்கவுள்ளது.

தங்கள் பணியின் போது காயம் அடைந்த ராணுவ வீரர்கள் கலந்து கொள்ளவே இந்த விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் ராணுவ வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விளையாட்டு நிகழ்ச்சியை பிரித்தானியா இளவரசர் ஹரி தான் முன்னின்று நடத்தவுள்ளார்.

கடந்த 2014ல் Invictus விளையாட்டு நிகழ்ச்சியை முதலில் தொடங்கியது ஹரி தான்.

பல்வேறு நாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியை காண வரவுள்ளார்கள்.

இந்நிலையில், அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலேனியா இதில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதில் டொனால்டு டிரம்ப் பங்கேற்க போவதில்லை. ஆகவே கணவர் இல்லாமல் மெலேனியா தனியாக செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாக இது இருக்க போகிறது.

இதையடுத்து மெலேனியா, இளவரசர் ஹரி மற்றும் அவர் காதலி மேகனை சந்தித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மெலேனியா விடுத்துள்ள அறிக்கையில், லண்டனிலும், Orlandoவிலும் இதுவரை நடந்த Invictus விளையாட்டு போட்டிகளின் வெற்றியால் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் எங்கள் நாட்டின் சார்பில் கலந்து கொள்வது எனக்கு பெருமையாகும் என கூறியுள்ளார்.

SHARE