
குழந்தையை இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Paul Hogan. இவர் மனைவி Cody-Anne Jackson (20) இவர்களுக்கு Macey Hogan (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக Paul அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Maceyயின் புகைப்படத்தை Paul-க்கு Jackson அனுப்பியுள்ளார்.
அதனுடன் ஒரு மெசேஜையும் Paulக்கு அவர் அனுப்பினார். அதில், இது தான் Macey-ஐ கடைசியாக எடுத்த புகைப்படம்.
உங்களை நீதிமன்றத்தில் நான் சந்திக்கிறேன். Maceyயின் நினைவாக அவளின் கடைசி புகைப்படத்தை உங்களுக்கு அனுப்ப தோன்றியதால் அனுப்பினேன் என கூறியிருந்தார்.
இது நடந்து இரண்டு நாட்கள் கழித்து Macey-ஐ Jackson துணியால் முகத்தை மூடி இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்ய கத்தியால் உடலில் காயத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஆனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை
பிறகு 999 என்ற அவசர உதவி நம்பருக்கு போன் செய்து தனது குழந்தை மூச்சு விடாமல் உள்ளது என கூறியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சடலமாக கிடந்த Macey-ஐ மீட்டார்கள். பின்னர் கைது செய்யப்பட்ட Jackson மீது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கணவருடனான உறவு முறிந்த பின்னர் Jackson மிகவும் ஆத்திரமான மன நிலையில் உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், Jackson-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி கூறுகையில், குழந்தையானது தாயை தனது பாதுகாப்புக்கு உறுதுணையாக நினைத்த நிலையில், அவரே குழந்தையை கொலை செய்திருப்பது பயங்கரமான செயலாகும்.
இது மனநல பாதிப்பால் செய்யப்பட்ட கொலையல்ல. திட்டமிட்ட செயலே என நீதிபதி கூறியுள்ளார்.