மாகாணசபை உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபாவை வழங்க அரசு தீர்மானம்!

210

மாகாணசபை உறுப்பினர்களின் தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவையும் அவர்களது காரியாலய நிர்வாகத்துக்காக மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவையும் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வடமேல் மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர்கள் பலருக்கு இப்போது தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.

காரியாலயங்களை நிர்வகிப்பதற்காக அவர்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்த போதும் அது இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே, சகல மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இனிமேல் மாதாந்தம் 75 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளில் குறைந்த பட்சம் அரைவாசித் தொகையாவது மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு வருடாந்தம் 45 கோடி ரூபா வரை செலவாகும் எனவும் தெரியவருகின்றது.

SHARE