
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை உடனடியாக வழங்குமாறு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வறட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிதண்ணீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் உடனடியாக செய்து கொடுக்குமாறும் பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.