1990 அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக 34000 பேர் நலன் பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அம்பியுலன்ஸ் சேவைக்கு ஒராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு இராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 1990 அவசர அழைப்பு அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக 33839 பேர் நலன் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஆண்டில் இந்த திட்டத்தை நாடு முழுவதிலும் விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்ஹா மாவட்டங்களில் இந்த சேவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை முழுவதிலும் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2000 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.