
ஹுங்கம, கலமெடிய மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிருடன் மீட்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 15 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் காப்பற்றப்பட்டு மற்றுமொரு படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இவர்கள் சென்ற படகு இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையிலேயே சுமார் 15 மணித்தியாலங்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.