கடந்த ஆண்டு நடிகர் அருண்விஜய் ஒரு பிரச்சனையில் சிக்கியிருந்தார். அதாவது இவர் குடித்துவிட்டு போலீஸ் வண்டியின் மீது மோதிவிட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது அந்த வழக்கிற்கு இறுதி முடிவு வந்துள்ளது. அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
தற்போது அருண் விஜய் நடிப்பில் தடம் படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.