குழந்தையை லாக்கரில் பூட்டி வைத்த பெற்றோர்

225

சீனாவைச் சேர்ந்த பெற்றோர் பொதுக்குளியலறையில் குளிப்பதற்காக தங்கள் கைக்குழந்தையை லாக்கரில் வைத்துவிட்டுச் சென்ற வீடியோ பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த பெற்றோர் தாங்கள் குளிப்பதற்கு குழந்தை இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக லாக்கரில் குழந்தையை அடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

குளித்து முடித்துவிட்டு வந்தப் பிறகு குழந்தையை லாக்கரில் இருந்து வெளியில் எடுக்கின்றனர். குழந்தை கத்தியவாறே பயந்து அலறுகின்றது.

அந்த வீடியோ காட்சியில், லாக்கர் அறையின் காவலராக இருக்கும் பெண்மணியை அழைத்து லாக்கரை திறந்துவிடும்படி அந்தக் குழந்தையின் பெற்றோர் கேட்கிறார்கள்.

லாக்கரைத் திறந்தவுடன், குழந்தை இருப்பதைக் கண்டு அந்தக் காவல் பெண்மணி பயந்து பதறுகிறார். ஆனால், அந்த வீடியோவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பது தெளிவாக தெரியவில்லை.

இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், அந்தக் குழந்தையின் பெற்றோரை, சுயநலக்காரர்கள், பொறுப்பில்லாதவர்கள் என்று திட்டிவரும் அதே நேரத்தில்,

எதிர்காலத்தில் அந்த குழந்தைக்கு, கிளாஸ்ட்ரோஃபோபியா (claustrophobia) அதாவது குழந்தை தனது வாழ்க்கையில் அதீத பயத்தோடு வாழும் சூழல் ஏற்படும்’ எனவும் வருத்தத்துடன் எச்சரித்துள்ளனர்.

SHARE