மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்படலாம் – இலங்கையரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்கிறது.

364

அண்மைக்காலமாக மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபைக்கு பிரேரணைகள் சமர்ப்பிப்பவர்கள் மீது இலங்கையரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அண்மையில் பிரஜைகள் குழுவின் தலைவர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சின்னத்துரை கிருஸ்ணராஜா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

இன்னும் 14 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகின்றனர். ஐ.நா சபையில் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்தடுத்த இறுதி அமர்வுகள் நடைபெறவிருப்பதனால் அதில் இலங்கையரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிக்கிக்கொள்ளவேண்டிவரும் என்ற காரணத்தினால் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கைதுசெய்யப்படுகின்றனர். இக்கைது தொடர்பில் தமிழ்த்தேசிய முன்னணி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்னும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தமது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

images (1)

முள்ளிவாய்க்கால் விவகாரம் தொடர்பாகவும் இறுதி யுத்தத்தின் பொழுது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், காணாமற்போனோர் தொடர்பாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சனல் 4 தொலைக்காட்சி ஆனது No Fire Zone  என்ற ஆவணப்படத்தினையும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இவ் ஆவணங்கள் தயாரிப்பதற்கு உதவியவர்கள் களத்தில் நின்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்களில் உயர்மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் அரசினால் பதவி குறைக்கப்பட்டு ஒருசிலர் இராணுவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

சனல் 4 நிறுவனத்திற்கு அதிகமான இராணுவத்திலுள்ளவர்களே தகவல்களையும் வழங்கி பணங்களையும் பெற்றுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க மனிதவுரிமை செயற்பாட்டாளர்களை கைதுசெய்வதும் விசாரணைகள் நடத்துவதும் நாட்டின் ஜனநாயத்தினை மீறும் செயலாகும். மனிதவுரிமை ஆணைக்குழுக்களையோ, மனிதவுரிமை குழுக்களோ நாட்டில் செயற்படுவதோ அல்லது அவற்றினை நிறுத்திவிடுவதோ சிறந்ததாகும். மனிதவுரிமை ஆணைக்குழுக்கள் என பெயருக்கு மாத்திரம் இருப்பது பயனில்லை. தமிழினமாகவிருந்தாலும், சிங்களம், முஸ்லீம் இனங்களாகவிருந்தாலும் எந்தவொரு இனங்களுக்கெதிராக மனிதவுரிமை மீறல்கள் இடம்பெறுகின்றபொழுது அதனை கேட்பதற்கும், அவ்விடயம் தொடர்பாக தண்டனைகளை வழங்குவதற்குமே இந்த மனிதவுரிமை ஆணைக்குழுக்கள் இருக்கின்றன. தொடர்ந்தும் இவ்வாறான கைதுகள் நடைபெறுமாகவிருந்தால் மீண்டுமொரு வன்முறைக் கலாசாரத்தினை இலங்கையரசு தானாகவே தோற்றுவிக்கின்றது எனலாம்.

SHARE