
ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற படைவீரர்களின் பெற்றோருக்கு படைவீரர் அதிகாரசபையினால் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
படைவீரர் அதிகாரசபையின் ஊடாக மதாந்தம் 750 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
இந்த கொடுப்பனவு பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுவதுடன் அவற்றை பெற்றுக் கொள்ள குறித்த பெற்றோர் வங்கிகளுக்கு செல்ல வேண்டியது கட்டாயமானதாகும்.
வயது முதிர்ந்த காலத்தில் வங்கிகளில் வரிசையில் நின்று குறித்த தொகை பணத்தைப் பெற்றுக் கொள்வதில் படைவீரர்களின் பெற்றோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில வேளைகளில் 750 ரூபா பணத்தைப் பெற்றுக் கொள்ள அதனை விடவும் முச்சக்கர வண்டிகளுக்கு செலவிட வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதாந்த கொடுப்பனவை வேறு வழியில் படைவீரர்களின் பெற்றோருக்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.