இன்று தேசியவாதம் மாற்றுத்தலமை பற்றி பேசும் ஆயுதகட்சிகள் திரைமறைவில் எப்படி EPDP யுடன் மறைமுகமாக விடுதலைப்போராட்டத்தை காட்டிக் கொடுத்தன அதனை பிரதிபலிக்கும் காலத்தால் அழியாத புகைப்படம்

243

 

“விடுதலை இயக்கங்கள் தாம் தமது மக்களின் நலன்களுக்காக, அவர்களின் உரிமைக்காகப் புறப்பட்டவர்கள் என்று பேசிக்கொண்டாலும், ஏதோவொரு புள்ளியில் இந்த வெகுஜனங்களின் விருப்பமாக இந்த விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை என்பது மேலோங்கியும், ஆனால், மக்களுக்காகப் புறப்பட்டவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏதோவொரு காரணத்தைக் குறிப்பிட்டுக்கொண்டு, ஒற்றுமை விடயங்களைப் பேசிக் கொள்வதற்காக உளச்சுத்தியற்ற வகையில், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்ததே, கடந்தகால வரலாறாக எம்முன் விரிந்து கிடக்கிறது.

இவ்வளவு இழப்புக்களையும் தாண்டி, மக்களும், போராளிகளில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரும் விரும்பும் விடுதலை அமைப்புக்களுக்கு இடையிலான இந்த ஒற்றுமையை, நாம் எவ்வாறு கட்டியமைக்க முடியும், அல்லது இவ்விடுதலை இயக்கங்கள் யாவரும் குறிப்பாக, தலைமைகள் அனைத்தும் இந்த விடயத்தில் எவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தமிழ் மக்களின் தலைவிதியும், அவர்களின் அரசியல் மேம்பாடும் தங்கியுள்ளது.

இந்த விடுதலை இயக்கங்கள் சேர்ந்து இயங்கும் போது, தலைமைத்துவத்தை யார் வகிப்பது, அவர்களுக்கிடையிலான பிணக்குகள் ஏற்படும் பொழுது, அவற்றை யார் தீர்த்து வைப்பது? எமது தாயகப் பிரதேசத்தில் எந்தப் பகுதியில் யார், யார் செயற்படுவது? அரசியல் சார்ந்த நடவடிக்கைகளையும் நிதி சார்ந்த விடயங்களையும் எவ்வாறு பங்கிடுவது? என்ற கேள்விகள், ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் காரணியும், பூதாகரமாக இருக்கும் கேள்வியுமாகும்.

இந்தச் சிக்கலான நிலைகளுக்கு விடை காண்பதற்காக சமூக விஞ்ஞானிகளாக இருப்பவர்களையும், சமூகத்தில் புத்திஜீவிகளாக மாத்திரமன்றி, சமூகத்தின்பால் அக்கறையுள்ளவர்களும் இனங்காணப்பட்டு, இவ்வாறான பொதுவானதொரு செயற்பாட்டை முன்னெடுக்கத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் ஒற்றுமை என்பதில்தான், எமது இனத்தின் ஒட்டுமொத்த பலமும் தங்கியுள்ளது என்பதை யாரும் மறக்கலாகாது.”

ஆம்! செயலாளர் நாயகம் தங்கியிருக்கும் போது, அதியுச்சப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தோழர்களில் பாதுகாப்பு சுற்றுக்களான உள்சுற்று, வெளிச்சுற்று, மூன்றாவது பாதுகாப்புச் சுற்றில் நிலையெடுத்திருந்த தோழர் செல்வமது துப்பாக்கியே வெடித்திருந்தது.

முன்னறிவித்தல் இல்லாது, தோழர் கண்ணன் தொலைத்தொடர்புக் கருவியுடன் மூன்றாவது பாதுகாப்பு வேலியைத்தாண்டி, ஓர் குறிப்பிட்ட பகுதியின் ஊடாக உள்நுழைய முற்பட்ட பொழுது, அந்த இருளில் ஆள்நடமாட்டத்தை உணர்ந்த தோழர் செல்வம் தனது துப்பாக்கியை இயக்கியிருந்தார்.

குறிதவறாத அந்த இலக்குகள் அந்த இரவில்கூட தோழர் கண்ணனுடைய கால்களை முறித்துப் போட்டிருந்தது. இவைகள் யாவும் நடந்தேறிய அந்தக் கணப்பொழுதில், மையப்பகுதியை நோக்கி விரைந்திருந்த மருத்துவத் தோழர்கள் கண்ணனை முதலுதவி செய்வதற்காகப் பாதுகாப்பானதொரு இடத்தை நோக்கி நகர்த்துகிறார்கள்.

என்ன ஆச்சரியம்! கண்டைக்கால் பகுதியில் எலும்புகள் உடைந்து, தசை நார்களில் பாதம் மட்டும் தொங்கிக் கொண்டிருக்க அதை அவதானித்தபடியே, மருத்துவத் தோழர்களை நோக்கி, கால் போயிற்றுப்போல என்று அந்த வேதனையின் உச்சத்திலும் தோழர் கண்ணன் கேட்கிறான்.

அதுமட்டுமா, குறைந்த வெளிச்சத்துடன், நாளங்களைப் பேணுவதற்காக ஊசியேற்ற முற்பட்ட பொழுது, முழங்கையின் மேற்பகுதியில் கட்டப்படுகின்ற அந்த இறப்பர் நாடாவை நாளங்கள் பிடிக்கும்வரை தனது கையாலே அழுத்திப்பிடித்து மருத்துவத் தோழர்களுக்கு உதவி புரிகிறான். இவ்வாறான அதீத வீரம்மிக்க தோழர்கள் மருத்துவ வரலாற்றில் இம்மண் கண்டதுண்டு.

தளப்பிரதேசத்தை பாதுகாத்துக் கொள்வதில், எம்மீது சுமையாக இருந்த ஆள்பற்றாக்குறை, திருமணமாகிய தோழர்களின் குடும்ப வாழ்க்கையையும் பாதித்திருந்தது. அர்த்தமுள்ள இந்துமதத்தில் கவிஞர் கண்ணதாஸன் அவர்கள் ஓர் போர்க்களத்தில் இருக்கும் வீரன் தனது தாம்பத்திய வாழ்வை 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வதே சரியென எடுத்துரைத்திருப்பார்.

எமது தளபதி அவர்களும், கண்ணதாஸன் அவர்களின் புத்தகங்களை வாசித்தாரோ என்னவோ, அர்த்தமுள்ள இந்துமதம் சொன்ன தத்துவத்தை எமது தோழர்கள் விடயத்திலும் கையாண்டார். இவை ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்த இலகுவாக இருந்த பொழுதிலும், பின்நாட்களில் விமர்சனங்களாகவும் வெளிப்பட்டுக் கிடந்தன.

ஒரு சமூகத்தின் தனிமனித விருப்புவெறுப்புக்களை, குறைபாடுகளை களைந்து கொள்வதற்காக ஒரு சமூகக் கட்டமைப்பிற்குள் சில அடிப்படை விழுமியங்கள் கட்டியமைக்கப்படுவதுண்டு. மாக்சிஷ, லெனினிஷ, மாஓவிஷ சிந்தனைகளுக்குள் சிதறுண்டு, அதன்பால் வளர்ந்த எமது மூத்த தோழர்கள் சமுதாய ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை அவ்வாறான கோட்பாடுகள் ஊடாக அவற்றிற்கு விடைகாண முற்பட்டிருந்தாலும், மனித மனங்களை இலகுவில் வெல்லக்கூடிய சமய, சம்பிரதாய, கலாசார நடவடிக்கைகளை உதாரணமாக, அனைத்து வணக்க ஸ்தலங்களையும், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என துப்பரவு செய்து மக்களை நெறிப்படுத்த வேண்டிய தேவையும் அம்மண்ணில் எமக்கு ஏற்பட்டிருந்தது.

SHARE