முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடியின் வளர்ச்சி குறைவு, அடர்த்தியற்ற முடி, கூந்தல் ஆரோக்கியமின்மை இது போன்ற முடியின் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ஒரே வழி இதோ,
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ மற்றும் இலை
- கறிவேப்பிலை
- வேப்பிலை
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
செம்பருத்தி பூ மற்றும் இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுகளை தேங்காய் எண்ணெய்யில் போட்டு செம்பருத்தி நன்றாக வேகவைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
பொடுகு பிரச்சனை இருந்தால், செம்பருத்தி நன்றாக வெந்தவுடன் அதில் சிறிதளவு வேப்பிலையை போட்டு பயன்படுத்த வேண்டும்.
முடி உதிர்வு மற்றும் முடி நன்றாக வளர வேண்டுமானால், அதில் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு பயன்படுத்த வேண்டும்.
செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை ஆகிய மூன்றையும் எண்ணெய்யில் நன்றாக கலந்த பின் எண்ணெய்யை ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி விட வேண்டும்.
செம்பருத்தி எண்ணெய்யை பயன்படுத்துவது எப்படி?
இந்த எண்ணெய்யை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். அல்லது தலைக்கு குளிப்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்கலாம்.
இந்த எண்ணெய்யை தினசரி பயன்படுத்தலாம். ஆனால் வாரத்தில் குறைந்தது 2 முறையாவது பயன்படுத்த வேண்டும்.
எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்?
செம்பருத்தி எண்ணெய்யின் மணம் மாறினாலோ அல்லது கெட்ட வாசனை அடித்தாலோ இதன் ஆயுள் காலம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதற்கு பின் இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.
நன்மைகள்
- முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- முடி பளபளப்பு மற்றும் மென்மையாக இருக்கும்.
- முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
- பொடுகை தொல்லைகள் வராது.
- நரை முடி மற்றும் தலை அரிப்பு நீங்கும்.