இலங்கையின் வரலாற்றில் முதல் சந்தர்ப்பம்! மைத்திரியின் புது அவதாரம்

225

இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது.

குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கிய ஜனாதிபதி, கப்பலின் பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதன் செயற்பாடுகளை ஜனாதிபதி பார்வையிட்டார். அதனையடுத்து கப்பலினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் இத்தகைய ஆணையிடும் நிகழ்வில் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.

 

 

SHARE