அஜித்-சிவா கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் விரைவில் விவேகம் படமும் வரவுள்ளது.
இதன் மூலம் ஹாட்ரிக் அடிக்க இந்த கூட்டணி ரெடியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை இமான் அண்ணாச்சி தான் திறந்து வைத்தார்.
இதில் இவர் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘அஜித் சாரின் அடுத்தப்படத்தில் நான் இருப்பதாக சத்யஜோதி நிறுவனம் கூறியுள்ளது.
அந்த படத்தையும் சிவா தான் இயக்கவுள்ளார்’ என கூறியுள்ளார், அஜித் எப்போதும் தன் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் கவனமாக இருப்பார்.
ஆனால், இமான் அண்ணாச்சி பொது இடத்தில் இப்படி பேசியது ஷாக் தான்.