
அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான விமானம் கடலோர பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எம்.வி22 பி ரக விமானம் 26 கடற்படை வீரர்களுடன் சில தினங்களுக்கு முன்னர் வானத்தில் பறந்துள்ளது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் குயின்ஸ்லாந்து கடலோர பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விபத்தை தொடர்ந்து 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டார்கள், மூன்று பேர் மாயமாகி விட்டார்கள்.
அவர்களை தேடும் பணியில் கடலோர மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாயமான 3 பேரும் உயிரிழந்து விட்டார்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் பெஞ்சமின் கிராஸ் (வயது 26), நத்தானியேல் ஆர்ட்வே (21), ரூபன் வெலஸ்கோ (19) ஆவார்கள்.
மூவரின் சடலங்களுக்கு இன்னும் மீட்கப்படாத நிலையில் அது தொடர்பான தேடுதல் வேட்டையில் மீட்பு குழுவினர் இறங்கியுள்ளனர்.