
உடல் பருமனை தொடர்ந்து பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.
அதிலும் 40 வயது கடந்தவர்களுக்கு உடல் உழைப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணத்தினால் உடல் எடை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.
உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டியவை?
- உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதுடன், கொழுப்பு நிறைந்த மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஏனெனில் அதனால் மதியம் அதிகப்படியான உணவு சாப்பிடத் தோன்றுவதுடன், ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டின் அளவு மற்றும் செரிமானம் அடையும் நேரம் வேறுபடும்.
- இரவுகளில் குறைவான உணவுகளை, குறைந்த அளவிலான கலோரி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் மசாலா உள்ள பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- உணவுகளை டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேகவைத்த உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதிக காரமான, துரித உணவுகளை சாப்பிடக் கூடாது.
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இனிப்பு நிறைந்த டீ, காஃபி, கூல் டிரிங்க்ஸ் போன்ற பானங்கள் குடிப்பதை தவிர்த்து விட வேண்டும்.
- ஒரு டம்ளர் பீர் அல்லது ஒயினில் 150 கலோரிகள் உள்ளது. அதை அதிகமாக குடித்தால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும், எனவே மது பழக்கத்தை விட வேண்டும்.
- அதிக மன அழுத்தம் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். அதனால் தியானம், யோகா , மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
- 40 வயதிற்குப் பின் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க வேண்டுமானால் தினமும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம்.