காதலை வெளிப்படுத்த சாலையில் பெண் செய்த செயல்

243

காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காதலி சாலையில் உட்கார்ந்து கொண்டு கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Chile நாட்டின் தலைநகர் Santiagoவின் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், இளம் பெண் ஒருவர் சாலையின் ஓரத்தில் கையில் மோதிரத்தை வைத்து கொண்டு உட்கார்ந்துள்ளார்.

அருகில் நிற்கும் காதலரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா என கேட்கிறார்.

அதற்கு, காதலன் ஆமாம் என கூறி பெண் வைத்திருக்கும் மோதிரத்தை அவரிடமிருந்து வாங்க நினைக்கிறார்.

ஆனால், மோதிரத்தை தர மறுக்கும் காதலி மீண்டும் அவரிடம் நான் உன்னை காதலிக்கிறேன், என்னை திருமணம் செய்து கொள்வாயா என கேட்கிறார்.

அதற்கு, ஆமாம் என காதலன் மீண்டும் பதிலளிக்க மீண்டும் அதே கேள்வியை காதலி கேட்டதுடன் மோதிரத்தை தரவும் மறுத்துள்ளார்.

காதலன், இன்னும் உணர்வுபூர்வமாக தன்னிடம் காதலை வெளிப்படுத்த வேண்டும் என காதலி நினைத்தாக தெரிகிறது.

காதலி செய்கையால் எரிச்சல் அடைந்த காதலன் அங்கிருந்து கிளம்பி சென்றார். காதலனை தடுத்து நிறுத்தாத காதலி சாலையில் உட்கார்ந்த படி அவர் நடந்து செல்வதை பார்ப்பது போல வீடியோவில் உள்ளது.

வீடியோவில் இருக்கும் காதலர்களின் பெயர்கள் மற்றும் சம்பவத்துக்கு பிறகு அவர்கள் சமரசம் ஆனார்களா என்ற விபரம் தெரியவில்லை.

SHARE