லண்டன் பிக் பென் கடிகாரம் குறித்து வெளியாகியுள்ள  அறிவிப்பு

186

உலக புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கடிகாரம், மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக பிரித்தானியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

157 ஆண்டுகளாக தேம்ஸ் நதிக்கரையோரம், வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் அமைந்திருக்கும் பிக் பென் கடிகாரம், தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதால், அதற்கான பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்யவேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன் படி ஆகஸ்ட் 21ம் நண்பகல் கடைசியாக ஒலிக்கவிருக்கும் பிக் பென் கடிகாரம். பின்னர், புனரமைப்புப் பணிகள் முடிந்து 2012ம் ஆண்டு முதல் திரும்பவும் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

மறுசீரமைப்பு பணிக்கு சுமார் 29 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் செலவழிக்கப்படுகிறது என பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், நான்கு ஆண்டுகளுக்கு இடையில் முக்கிய தேசிய விழா, புத்தாண்டு அன்று பிக் பென் கடிகாரம் ஒலிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE