முழு உலகத்தின் கவனமும் மகிந்த சிந்தனை மீது: – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

464
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட மகிந்த சிந்தனையை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பாதுகாப்பு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகள், உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் என்பன ஆலோசனைகளை வழங்கினாலும் அந்த ஆலோசனைகளை அப்படியே செயற்படுத்தாது இலங்கைக்கே உரிய பொருளாதார முறையை உருவாக்கி கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE