15 நிமிடத்தில் 15 கிலோ உடல் எடையை குறைக்க: புதிய டெக்னிக்

189

அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள், அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகிறது.

இதற்கு தீர்வாக கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. அதோடு இம்முறையை சரியாக பின்பற்றினால் 15-30 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.

கேஸ்ட்ரிக் பலூன் என்றால் என்ன?

கேஸ்ட்ரிக் பலூன் என்பது மிருதுவான சிலிகான் பலூன். இதை வயிற்றின் உள்ளே செலுத்தி, அதில் காற்றை நிரப்பி சற்று பெரிதாக்குவார்கள். இதனால் வயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை எப்படி செய்ய வேண்டும்?

கேஸ்ட்ரிக் பலூனின் புதிய டெக்னிக் தான் கேஸ்ட்ரிக் பலூன் பில் காப்சூல். இதை விழுங்க செய்து, ஒரு டியூப் மூலமாக அதை வயிற்றில் வைத்து, காற்றை நிரப்புவார்கள். அதன் பின் இந்த டியூப்பை அகற்றி விடுவார்கள்.

இம்முறையில் அதிகபட்சம் 3 பலூன்கள் வரை வைக்கப்படலாம். ஆனால் குறைந்தபட்சம் இதை 12 வாரங்களில் அகற்றி விடுவார்கள். இந்த செயல்முறை 15 நிமிடங்களில் முடிந்துவிடும்.

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சையால் பாதிப்புகள் ஏற்படுமா?

வாய் வழியாக கேஸ்ட்ரிக் பலூனை என்டோஸ்கோப் முறையில் செலுத்தும் போது, வலியுடன் சில அசௌகரியங்கள் ஏற்படும்.

சிலருக்கு பலூன் அகற்றப்படும் போது ரத்தப்போக்கு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

கேஸ்ட்ரிக் பலூன் அகற்றிய ஒருசில நாட்கள் வயிறு மந்தமாக இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை எவ்வளவு எடையைக் குறைக்கும்?

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை முறையால் சராசரியாக ஒரு நபரின் உடல் எடையில் 20-30% வரை உடல் எடையை குறைக்கலாம்.

அதாவது இம்முறையால் 100 கிலோ எடை உள்ளவர்களின் உடல் எடையை 70-80 கிலோ எடை வரை குறைக்க முடியும்.

ஆனால் இம்முறை ஒவ்வொரு நபரிடமும் வேறுப்பட்ட பலனை அளிக்கலாம்.

கேஸ்ட்ரிக் பலூன் முறை யாருக்கு சரியானது?

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை முறையானது உடல் எடையில் 27-35 BMI அளவு கொண்டுள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

இந்த கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை மேற்கொள்ளும் முன் மருத்துவர்கள் கூறும் டயட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.

இந்த சிகிச்சை மேற்கொள்ளும் முன் 12 மணிநேரம் எதையும் சாப்பிடக் கூடாது. சிகிச்சைக்கு பின் 6 மணி நேரம் எதையும் குடிக்கக் கூடாது.

சிகிச்சை செய்த பின்பும் மருத்துவர்கள் கூறும் டயட்டை சரியாக பின்பறுவதுடன், சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பு

கேஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை முறையில் பலூனை வாய் வழியாக வெளியே எடுப்பதால், இந்த சிகிச்சை முடிந்த பின்பும் கூட ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

SHARE