கருத்தடை செய்துகொண்டால் சிறையிலிருந்து விடுதலை

185

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு விடுதலை வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னசி மாகாணம் வைட் கவுண்டியை சேர்ந்த டியோனா டோலிசன் என்ற பெண் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், தனக்கு பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் தனது தாயை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதால், தான் சிறையில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி சாம் பென்னிங்ஃபீல்டு, 4 ஆண்டுகாலம் கருத்தடைக்கு ஒப்புக்கொண்டால் சிறை தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவீர்கள் என்ற திட்டத்தை அறிவித்ததையடுத்து அப்பெண்ணும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்தத் திட்டம் அந்த சிறைச்சாலையில் செயல்படுத்தப்படுவது அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், வைட் கவுண்டியில் உள்ள ஸ்பார்ட்டா என்னும் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகமாக நிலவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறையும் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால், சிறப்பான அறிவுத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களை தவிர மற்றவர்களை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருந்து தடுக்கும் முயற்சி இது சமூக பொறுப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏழ்மை நிலையில்இருப்பவர்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையனார் ஆகியோருக்குக் கட்டாய கருத்தடை செய்வது அமெரிக்காவில் நெடுங்காலமாகவே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE