
பார்வைக் குறைபாடுளை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடிகளை அணிவதற்கு பதிலாகவும், அழகுக்காகவும் கன்டாக்ட் லென்ஸ் அணிவது பேஷனாக மாறி வருகின்றது.
எனினும் இவ்வாறு கன்டாக்ட் லென்ஸ் அணிவதால் பாரிய ஆபத்து காத்திருக்கின்றது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கன்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது மீண்டும் மீண்டும் கழற்றி அணிவதால் விழிவெண் படலம் பாதிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அனேகமானவர்கள் தரம் குறைந்த கன்டாக்ட் லென்களை பயன்படுத்தி வருகின்றனர், இது பாரிய ஆபத்தை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் Centers for Disease Control and Prevention அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 99 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கன்டாக்ட் லென்ஸ் அணிவதால் தாம் ஏதாவது ஒரு கண் நோய்த் தொற்றுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய ஆய்வின்படி 1,075 அறிக்கைகள் பாரதூரமானதாக காணப்படுவதாகவும், இவை கண்ணில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு விழிவெண்படல பாதிப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.