
வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளின் தொல்லையை முற்றிலும் விரட்ட சில அற்புதமான வழிகள் இதோ,
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் தோலை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றம் மூலம் கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.
பேக்கிங் சோடா
ஒரு பிளாஸ்டிக் மூடியில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதை வீட்டின் ஒரு இடத்தில் வைத்து 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
பிரியாணி இலை
பிரியாணி இலையை பொடி செய்து, அதை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராது.
சோப்பு தண்ணீர்
வீட்டில் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், இறந்து விடும்.
மாவு
மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.
வெள்ளைப்பூண்டு
கரப்பான் பூச்சிகள் உள்ள இடத்தில் வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறு துண்டுகளாக்கி அதை கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.
முட்டை ஓடுகள்
முட்டையின் ஓட்டை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வீட்டின் மூலைகளில் வைத்து விட்டால், கரப்பான் பூச்சி வராது.
கிராம்பு
சிறிது கிராம்பை ஏதேனும் ஒரு டப்பாவின் பக்கத்தில் அடிக்கடி மாற்றி மாற்றி வைத்து வந்தால், நாளடைவில் கரப்பான் பூச்சி வருவதை தடுக்கலாம்.