காளானை யாரெல்லாம் சாப்பிடலாம்?

215

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • காளான் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • காளானில் லென்டிசைன் மற்றும் எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள் நம் உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தமாக்க உதவுகிறது.
  • காளானில் உள்ள புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
  • காளான் சூப் எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. எனவே இந்த சூப்பை கடும் காய்ச்சல், உடல் இளைத்தவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • காளானில் உள்ள ப்ரோட்டீன், ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் கரைக்கவும் உதவுகிறது.
  • இரும்புச்சத்து அதிகம் உள்ள காளானை, இரும்புச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடலாம்.
  • காளான், நிறைய தண்ணீர், ஃபைபர் மற்றும் இன்சுலின் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதனால் இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
SHARE