மொராக்கோ நாட்டில் ஊனமுற்ற பெண்ணின் ஆடைகளை கிழித்து உடல்ரீதியாக வன்முறைகள் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூகவலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் இருப்பதாவது, Casablanca நகரில் ஓடும் பேருந்தில் அமர்ந்திருந்த ஊனமுற்ற பெண்ணை 6 வாலிபர்கள் ஒன்று சேர்ந்து கிண்டல் செய்கின்றனர்.
அதன்பின்னர், அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அரேபிய மொழியில் அப்பெண்ணை அவமானப்படுத்தியுள்ளனர்.
என்னை விட்டுவிடுங்கள், என்னை காப்பாற்றுங்கள் என அப்பெண் குரல் கொடுத்தும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட 15 முதல் 17 வயதுக்குட்ட 6 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மொராக்கோவில் பெண்களின் மூன்றில் இரண்டு பங்கினர் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளும் அங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.