முன்னாள் மனைவியின் காதலனை கொலை செய்த இலங்கையர்  பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை

864

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பாக மற்றுமொரு இலங்கையர் நீதிபதியினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி 32 வயதாக சுரேன் சிவானந்தன் என்பவர் Co-op in St Leger Drive, Great Linford, Milton Keynes பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நேற்று Luton Crown நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்ற 38 வயதான இலங்கையர் மற்றும் Milton Keynes பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் நீதிபதியினால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் 10.2 என்ற பெரும்பான்மை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த இருவருக்கும் தண்டனை வழங்குவதற்கு திகதி ஒன்றை தீர்மானிப்பதற்காக இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபரான Milton Keynes பகுதியை சேரந்த 24 வயதுடைய பிரசாந்த் தேவராசாவுக்கு எதிராக, ஒரு நோக்கத்துடன் நபர் ஒருவர் மீது கடுமையான காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கும் 10.2 என்ற பெரும்பான்மை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் நான்காவதாக குற்றம் சுமத்தப்பட்ட கிரேராஜ் யோகராஜா என்பவர், Luton Crown நீதிமன்றத்தின் 5 பெண்கள் மற்றும் 7 ஆண்களை கொண்ட ஜுரி மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இடம்பெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, Milton Keynes பகுதியில் வசித்த பாலச்சந்திரனினால் கைவிடப்பட்ட மனைவியுடன் தங்கியிருந்தார் என கூறப்பட்டது.

சுரேனை கொலை செய்வதற்கு முன்னர் இலங்கையரான பாலச்சந்திரன் 12 மணி நேரம் அவரை சிறைப்பிடித்து வைத்திருந்ததோடு , Milton Keynes பகுதியில் வைத்து தொடர்ச்சியாக தாக்கி கொலை செய்துள்ளார்.

பாலச்சந்திரனால் கைவிடப்பட்ட மனைவி, சுரேனுக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார். இதன் போது பாலச்சந்திரன் அவரது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்துள்ளார். “ஏன் நீ அவனை பற்றி கேட்கிறாய், அவன் எங்கே? உன்னால் கணவருடன் வாழ முடியாமல் இன்னும் ஒருவனை அடைய முயற்சிக்கின்றாய். நீ தவறானவள்.. நான் அவனுக்கு என்ன செய்ய போகின்றேன் என நீ பார்க்க போகின்றாய்.” என பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த நாளான ஜனவரி மாதம் 21ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் சிவானந்தனின் சடலம் Great Linford பகுதியில் உள்ள கடை தொகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் அவரது உச்சந்தலையில் தீவிர காயம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE