பிரித்தானியாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் சிறைக்கைதிகள் நிர்வாணக் கோலத்தில் நாய்கள் போன்று சண்டையிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
மேற்படி காணொளிக் காட்சியானது கிரேட்டர் மான்செஸ்டரில் சுவின்டன் பிராந்தியத்திலுள்ள பொரெஸ்ட் பாங் சிறைச்சாலையில் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் போதைவஸ்து துண்டொன்றைப் பெறுவதற்காக தமது ஆடைகளை களைய நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் நாய்கள் போன்று துணிப் பட்டியால் கட்டப்பட்டு சண்டையிட வலியுறுத்தப்படுகின்றனர்.
இதன்போது அந்த இரு கைதிகளும் ஒருவரது பிருஷ்டப் பகுதியை மற்றவர் முகர்வதும் பின்னர் அந்தப் பகுதியில் கடிப்பதுமாக சண்டையிடுகின்றனர்.
அத்துடன் அந்தக் காணொளிக் காட்சியில் குறிப்பிட்ட சிறைக்கூடத்தில் மடிக்கணினி மற்றும் சுடுநீர்போத்தல்கள் என்பன காணப்படுகின்றன. அதேசமயம் சண்டையிடும் சிறைக்கைதிகள் ஆரம்பத்தில் கைதிகள் அணியும் ஆடையை அணியாது சாதாரண உடையுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி காணொளிக் காட்சியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.