பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

267

பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார்.

காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது.

அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்தில்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் நடைபெறுகிறது.

ஆனால், அதனைப் பெண்கள் மௌனத்துடன் கடந்து செல்கிறார்கள்.

அதுதான் அச்சம் தருவதாக உள்ளது என்று எழுதியிருந்தார்.செவ்வாய்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது கௌரி லங்கேஷை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். கொலையாளிகள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE