
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான காணாமல்போனோர் தொடர்பாக விடயங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கிலேயே இந்த நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதா க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வில் பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கள் பலரும் உரையாற்றவுள்ளனர். மேலும் காணாமற்போனோருக்கு என்ன நடந்தது, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.