கண் பார்வையற்ற குழந்தைகளையும் விட்டுவைக்காத காமூகன்

236

கண் பார்வையற்ற குழந்தைகளையும் விட்டுவைக்காத காமூகன்

இந்தியா – டெல்லியில் கண் பார்வையற்ற குழந்தைகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்த வந்த விவகாரம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கண் பார்வையற்றோர்களை பராமரிக்கும் அமைப்பில் நன்கொடையாளாராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைசேர்ந்த முர்ரே வார்ட்.

54 வயதான இவர், அந்த அமைப்பிற்கு அவ்வபோது வந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளார்.

அந்த பாடசாலையில், பணிபுரிந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவரது மடிக்கணனியில் ஆட்சேபனைக்குரிய காணொளிகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முர்ரே டெல்லி குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE