
சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது உற்சாகத்தில் இருந்தார் சசிகலா. சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டபோது சசிகலா மட்டும் அல்லாமல் அவரது ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உரைந்தது.
மேலும் சிறையில் உள்ள சசிகலா மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து 3 வருடம் கட்டாயமாக சிறையில் தான் இருக்கும் வேண்டும் என்ற சூழ்நிலையில் வந்த பிறகு கட்சி மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வாகிக்கும் பொறுப்பு அனைவரிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்ற வாரம் சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன் மனைவி சசிகலாவிடம் பல்வேறு முக்கிய பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக சென்னை, பெங்களுரூ உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தினகரனிடம் கண்கலங்கிய சசிகலா கட்சிக்காக இத்தனை நாள் பட்ட கஷ்டம் வீணாக கூடாது என்றும் கட்சியை காப்பாற்ற எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.