மாணவி அனிதா தற்கொலை: உச்ச நீதிமன்றில் இன்று விசாரணை

253

மாணவி அனிதா தற்கொலை: உச்ச நீதிமன்றில் இன்று விசாரணை

மாணவி அனிதாவின் தற்கொலை வழக்கு மீது தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் உச்ச நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மருத்துவக் கல்விக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவும் ஒருவர்.

பிளஸ்2 தேர்வில், 1,200க்கு, 1,176 மதிப்பெண் பெற்ற போதிலும், நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

இதேவேளை, நீட் நுழைவுத் தேர்வை எதிர்க்கும் வழக்குகளை, உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்த்து.

இதனால், மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், ‘மாணவி அனிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என, மூத்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE