அர்ஜூன் ரெட்டி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும், வசூலையும் அள்ளிக்கொண்டிருக்கும் திரைப்படம். இப்படத்தால் பலரின் பாரட்டுக்களை வாங்கியிருக்கிறார் ஹீரோயின் ஷாலினி பாண்டே.
ஆந்திராவில் செல்போன் கடையை திறந்துவைக்க சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதோடு அங்கே சென்றவர் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியாகி மயங்கி விழுந்துவிட்டாராம்.
அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்த பின் மீண்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின் ஹைதராபாத் கிளம்பியுள்ளார்.