ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டியும், ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தும் சுவிஸின் ஜெனிவா நகரில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன், நோர்வே, ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்தும் சுவிஸில் இருந்தும் வருகை தந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.
சுவிஸ் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனிவா ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி ஐ.நா அலுவலகத்தில் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “உலகே தமிழர்களின் நியாயமான உரிமையை அங்கீகரி”, “போர்க்குற்ற விசாரணையை நடத்து”, “எமக்கு வேண்டும் எமது நாடு”, “எமக்குத் தா எமது தேசத்தை” போன்ற கோஷங்களை இதன்போது எழுப்பினார்கள்.
அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்றிலில் தீக்குளித்து இறந்த முருகதாஸின் படத்துக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புலிக் கொடி ஏற்றப்பட்டது. போரினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இதன் போது அக வணக்கமும் செய்யப்பட்டது.
அதன்பின்னர் ஆர்ப்பாட்ட குழுவினர் சார்பில் சில பிரதிநிதிகள் ஐ.நா தலைமையகத்துக்குள் சென்று அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, “தமிழர்களின் துயரங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நீதியான தீர்வொன்றைப் பெற்றுதர ஐ.நா கடுமையாக முயற்சிக்கும் என்று ஐ.நா அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதி வழங்கினர்.
ஜெனிவாவில் இன்னும்காத்திருக்கிறது பொறி
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இந்த கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்துவிட்டது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசிடமே அறிவித்தது.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இந்த கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்துவிட்டது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசிடமே அறிவித்தது.
ஹிலரி கிளின்டன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அனுப்பி கடிதம் மூலம் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது. இதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் மரியோ ஒடாரோ மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரண்டாவது முறையாக அறிவித்தனர்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த சந்தர்ப்பத்தில், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியோ, சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெலய உறுமயவோ, அமெரிக்க தூதரகத்துக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்களையோ, உண்ணாவிரதங்களையோ மேற்கொள்ளவில்லை. எனினும் அரசு அமெரிக்காவின் யோசனையை தோற்கடிக்கும் நோக்கில், பாரிய பிரசாரம் மற்றும் அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
52 பேர் கொண்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஜெனிவா சென்றனர். இந்த குழுவில் வேறு நாடுகளில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை போன்ற அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
உண்மையில் அமெரிக்காவின் யோசனைக்கு ராஜபக்க்ஷ அரசு ஏன் இவ்வளவு அஞ்சி இவ்வாறு பதற்றமடைந்துள்ளது என்பதை உணர்ந்துக்கொள்ளவது கடினமானது. அமெரிக்காவின் யோசனையானது ஒரு அறிவிப்பை போன்றது என்பதே இதற்கான காரணமாகும். இந்த யோசனையானது இலங்கை அரசுக்கு எந்த கடப்பாடுகளை ஏற்படுத்தாத ஒன்று. வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்காவின் யோசனையானது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் யோசனையாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத் தப்படுகிறதா என்பதை மனித உரிமை பேரவை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமெரிக்காவின் யோசனையில் கோரிக்கை விடுக்கப்பட மாட்டாது. அத்துடன் அந்த யோசனையில் போர் குற்றங்கள் தொடர் பிலோ, சர்வதேச விசாரணை குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அது மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவே எதுவும் காணப்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசெம்பர் மாதம் பகிரங்கப்படுத் தப்பட்டது. இலங்கையின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்கள் அனைத்து அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறே கோரிக்கை விடுத்தன.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்முன் வைக்க யோசனையிலும் இதுவே கோரப் பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டங்களை முன்வைக்குமாறும் அதனடிப்படையில் சர்வதேச மனித உரிமை மீறல்களை உடனடியாகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் விசாரணை நடத்துமாறும் அதற்கு தேவையான உதவியை மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மிகவும் காரணங்களை சுட்டிக் காட்டும் சிறிய மற்றும் விவரமான விமர்சனங்களை முன்வைத்தது, தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கையில் முற்றாக தவறான தோற்றப்பட்டை முன்வைத்துள்ள தாக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன் இலங்கை ஆயுதப்படையினர் மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆணைக்குழுவின் அறிக்கை மூடிமறைத்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக எப்படி யான விசாரணை நடத்தப்பட்டாலும், அந்த விசாரணை அது பக்கசார்பற்றது மாத்திரமல் லது இலங்கை மக்கள் மத்தியில், நம்பிக்கையை வென்றெடுக்கும் விசாரணையாக இருப்பது மிகவும் முக்கியமானது.
இலங்கையில் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பாக அரசியல் அர்ப்பணிப்பு தற்போது அரசுக்கு இருக்குமானால், யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அதனுடன் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அவ்வாறின்றி, நாட்டின் தலைவரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துமாறு கொண்டு வரப்படும் யோசனையை எதிர்ப்பதன் மூலம் இலங்கை அரசு எதனை வெளிப்படுத்துகிறது?.
இரண்டு விடயங்கள்:
இதில் முதலாது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் செயற்படுத்த அரசுக்கு விருப்பமில்லை அல்லது இயலாமை ஆகும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், யுத்ததிற்கு பின்னரான இராணுவமயப் படுத்தல், குடும்ப அரசியல் திட்டங்கள் அனைத்து இல்லாமல் போய்விடும். இதனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சீரழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, வடக்கில் இராணுவமயப் படுத்த நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்கனவே ராஜபக்ஷ அரசு குப்பைக் கூடையில் எறிந்து விட்டது. வடக்கில் எந்த இராணுவயமப் படுத்தலும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதன் மூலம் இது புலப்பட்டுள்ளது. மற்றுமொரு பரிந்துரை இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும் என்பதாகும்.
சுதந்திரத்தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாட இடமளிக்காததன் மூலம் ஜனாதிபதியே அந்த பரிந்துரையை குப்பையில் எறிந்து விட்டார் என இன்னுமொரு உதாரணமாகும்.
மேலும் சனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ சம்பந்தமாகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதற்கு பதிலாக ராஜபக்ஷ அரசு இராணுவ விசாரணை ஒன்றை ஆரம்பித்தனர். இது போதாதென்று, ஆணைக்குழுவின் அறிக்கையில் துணை ராணுவத்தினரை வழி நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட ஜெனிவா பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு பதிலாக, அடையாளம் தெரியாத சடலங்கள் அங்கங்ககே மீட்கப்படு வதுடன், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் மக்கள் கூட்டங்கள் மீதும், கருத்துச் சுதந்திரம் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறன.
இதடினப்படையில் பார்க்கும் போது, இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கோரும் யோசனை நிறைவேற்றப்படுவது தமக்கு ஏற்படும் மரண ஆபத்து என ராஜபக்ஷ நிர்வாகம் தீர்மானித்துள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வது சிரமமான காரியமல்ல.
தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அரச தலைவர் ஒருவர் அஞ்ச நேர்ந்த யுகம் ஒன்றும் இன்னும் இருக்கின்றதா?.
இந்த அச்சத்தின் அடிப்படையிலேயே இரண்டாவது காரணம் எழுகிறது. சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் தோல்வியை சந்திப்பது தாங்கிக்கொள்ள முடியாத அனர்த்தம் என்ற உணர்வாகும்.
சுருக்கமாக சொன்னால்: நாட்டின் ஜனநாயகம், மக்களின் மனித உரிமைகளை விட, அதிகாரத்தில் இருப்பது அவசியமாகி போனால், ஜனநாயகம், மனித உரிமை குறித்து பேசுவது மரண பொறியாகவே தெரியும். அப்போது, அடக்குமுறையை தவிர வேறு வழிமுறைகள் இல்லை. அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ்வர்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இம்முறை ஜெனிவாவில் கொண்டு வரப்படும் பிரேரணையிலிருந்து இலங்கை அரசு மீள்வது என்பது இலகுவான விடயம் அல்ல. ஏற்கனவே சிரியாவுக்கு எதிரான பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்த இலக்கு இலங்கைதான். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அது எடுக்கும் எந்த முயற்சியும் இலகுவில் தோல்வி கண்டதாக இல்லை.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்ற கொள்கையிலேயே அமெரிக்கா இப்போதும் வியூகம் வகுத்துச் செயற்பட்டு வருகிறது. சதாம் ஹுசைன், ஒசாமா பின்லேடன், மும்மர் கடாபி ஆகியோரின் வீழ்ச்சிக்காக நீண்ட நாள் காத்திருந்து பொறி வைத்ததும் இந்த அமெரிக்காதான். அப்படியான ஒரு அசட்டுப் பலம்கொண்ட அமெரிக்கா இப்போது இலங்கைக்கு எதிராகத் தூக்கியிருக்கும் பிரேரணையும் இலகுவில் தோற்கடிக்க முடியாதது என்றே எண்ணத் தோன்றுகின் றது. காரணம் அதற்கான முன்னாயத்தங் களை இராஜதந்திர அணுகுமுறைகளை ஏற்கனவே மேற்கொள்ளாமல் அது ஒருபோதும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கவேமாட்டாது. ஒட்டு மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் இலங்கை அரசுக்கு ஆப்புத்தான்.
ஜெனிவாவில் முனைப்படையும்இராஜதந்திரப் போர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஆரம்பமாகியுள்ளது.
நீண்ட காலமாகவே சர்வதிகார ஆட்சியாளர்களாக விளங்கிய எகிப்தின் அதிபர் முபாராக், லிபிய அதிபர் கேணல் கடாபி ஆகியோரின் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட அதேவேளையில் சிரிய அதிபரின் ஆட்யைக் கவிழ்க்கப் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இன்னும் பல மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டங்கள் சர்வதிகார ஆட்சிகளுக்கு எதிராக இடம்பெற்று வருகின்றன.
இப்படியான சர்வதிகார ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் மனித உரிமைகளும் ஏனைய சுந்திரங்களும் பறிக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் தொடரும் இவ்வேளையிலே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை தமது உரையில் சிரியாவில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாகவும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் காரசாரமான கண்டனங்களைத் தெரிவித்தார். இலங்கையில் போரில் இறுதி நாள்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும் அவர் அவை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
எனினும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரமே சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைப் பின் தள்ளிவிட்டுத் தற்சமயம் முக்கிய பிரச்சினையாக வெளிப்பட்டு நிற்கிறது.
சகல நாடுகளும் அதாவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்க தகுதி பெறாத சில நாடுகள் உட்பட இலங்கை விவகாரத்தில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்படுகின்றன. இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உரையாற்றினார்.
அதையடுத்து தாய்லாந்து பிரதிநிதியும் இலங்கைக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த போதிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தத் தவறவில்லை. மேலும் ரஷ்யப் பிரதிநிதி இலங்கைக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் சிறிய நாடுகளில் உள் விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடினார்.
இலங்கைக் குழுவினர் அந்தப் பேச்சு தமக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட கருத்து என்றே கூறிக் கொண்டனர்.
கியூபா தனது ஆதரவைப் பூரணமாக இலங்கைக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை கியூபா ஏற்றுக்கொண்டு வழங்கும் ஆதரவு என நாம் கருதிவிட முடியாது. மூன்றாவது உலக நாடு ஒன்றின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற அடிப்படையிலேயே கியூபா இலங்கைக்கு ஆதரவு வழங்குகிறது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி எப்போதுமே அமெரிக்காகவுக்கு எதிராகக் கியூபாவும், கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவும் நிலைப்பாடுகளைக் கொண்டவை என்பதும் ஒரு முக்கிய விடயமாகும்.
இப்படியாகக் கூட்டத் தொடரில் உரைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் கூட்டத் தொடருக்கு வெளியே ஒரு பெரும் ராஜதந்திரப் போர்க்களம் விரிவடைந்துள்ளது. இலங்கைத் தரப்பும் அமெரிக்கத் தரப்பும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் விவாதங்களும் மாறி மாறி தீவிரமாகவும் அடிக்கடியும் இடம்பெற்று வருகின்றன. இலங்கைக் குழுவினர் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து தங்கள் விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாகச் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். அதேபோன்று ஆபிரிக்க நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். அல்ஜீரியா, மனித உரிமைகள் பேரவையில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத போதும் ஏனைய முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு ஆதரவாகத் திரட்ட முயற்சிகளைச் செய்வதாக இலங்கைக்கு வாக்களித்துள்ளது.
அதேவேளையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு ஆதரவு தேடி வருகிறார். தற்சமயம் தென்னாபிரிக்காவில் தங்கியுள்ள அவர் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார். இதுவரை அவருக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இலங்கைக் குழுவில் சென்றிருந்த போதிலும் அவர்கள் எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
மறுபுறத்தில் இலங்கைக்கு எதிராக நாடுகளை அணிதிரட்டுவதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் நோக்குடன் அமெரிக்காவிலிருந்து 15 பேர் கொண்ட ஒரு குழுவும் பிரிட்டனிலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனிவா வந்திறங்கியுள்ளனர். இந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு மிகத் தீவிரமான முறையில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த தாய்லாந்து உட்படச் சில நாடுகள் எதிர்ப்பக்கம் மாறக் கூடிய வாய்ப்புக்கள் தோன்றக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக இலங்கைத் தூதுக்குழுவினர் மீண்டும் அந்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்க முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
அதேவேளையில் இந்தியா, ஜோர்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இன்னும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஜோர்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கடைசி நேரத்தில் அமெரிக்காவின் பக்கமே நிற்கும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே ஈரானிடம் எண்ணெய் கொள்முதல் செய்வது சம்பந்தமாக அமெரிக்காவின் கசப்புணர்வைச் சந்தித்த இந்தியா மீண்டும் ஒரு முறை அமெரிக்காவுடன் இலங்கைக்காக முரண்படும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தியா வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதெனவே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் ஜெனிவாவுக்கான இந்தியத் துணைத்தூதுவர் கேவாபட்டாச்சார்யா அமெரிக்க அழுத்தம் காரணமாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்த பல நாடுகள் தடம்புரளலாம் எனவும் இலங்கைக்குழு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
அவரது ஆலோசனையில் பிரதிநிதிகளைச் சந்திப்பதைவிட அந்தந்த நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதே பயன்மிக்கது எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம் புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மனித உரிமை நிறுவனங்களும் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்து தமிழ் மக்கள் தொடர்பான நியாயங்களை விளக்கி வருகின்றனர்.
அதாவது இன்று ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வளாகம் ஒரு பெரும் ராஜதந்திர யுத்தகளமாக மாறியுள்ளது. இலங்கை ஒரு புறமும், இலங்கையில் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பவர்கள் மறுபுறமுமாக வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்கா அமைதியாகவும் தந்திரமாகவும் தனது காய்களை நகர்த்த இலங்கை அதற்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில் போரில் பாதிக்கப்பட்ட, பேரழிவுகளைச் சந்தித்த இலங்கைத் தமிழர்களாகிய எம்மைக் கருவூலமாகக் கொண்டே இந்தக் களம் விரிந்திருக்கிறது.
போரின் இறுதி நாள்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படுவது தொடர்பாகவே இந்த ராஜதந்திரப் போர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகிறது. இதைக் கொண்டு வருவதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முன்னின்று உழைக்கின்றன.
அவர்களைப் பொறுத்த வரையில் பொதுவாகவே மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினையே! ஆனால் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒரு ஜீவாதாரப் பிரச்சினையாகும்.
இந்தப் போரின் இறுதி நாள்களில் கொல்லப்பட்ட 40,000 மக்களின் உறவுகள், விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள், உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாகி விட்டவர்கள் ஆகியோர் தொடர்பான நியாயங்களைக் கோரும் ஒரு நடவடிக்கையாகும். அதுமட்டுமன்றி போர் முடிந்த பின்பும் இலங்கை அரசால் தொடரப்படும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அம்பலத்துக்குக் கொண்டு வரும் ஒரு அத்தியாவசிய முயற்சியாகும்.
மனித உரிமைகள் பேரவையில் இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெறுமானால் தமிழ் மக்கள் மேல் நடத்தப்பட்ட பேரழிவுக்கு இலங்கை பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து இன ஒடுக்குமுறையைத் தொடர முடியாத ஒரு நிலையும் ஏற்படும்.
ஆனால், இந்தக் கண்டனப் பிரேரணை தோல்வியடையுமானால் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகள் மூடி மறைக்கப்படும். இலங்கை அரசு புதிய உற்சாகத்துடன் மேலும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தொடரும்.
எனவே இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிபெற ஒவ்வொரு தமிழனும் தன்னால் இயன்ற முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தநிலையில் தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் கடமையை உணர்ந்து ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத் தொடரில் பங்குகொள்ள வேண்டும். அங்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து எமது நிலையைத் தெளிவுபடுத்துவதுடன் இலங்கை அரசின் பொய்மைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
இந்தக் கடமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யத் தவறினால் ஒரு முக்கிய கடமையைச் செய்ய வேண்டிய தருணத்தில் செய்யத் தவறிய வரலாற்றுத் தவறைச் செய்த பழிக்கு ஆளாக வேண்டி வரும்.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் இன்று பெரும் பரபரப்புடன் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவர் Laura Lasserre Dupuy, ஐ.நா பொதுச் சபையின் தலைவர் நசீர் அப்துல் அசிஸ் அல்-நாசர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார திணைக்களத் தலைவர் Didier Burkhalter ஆகியோர் இந்தக் கூட்டத்துக்கு முன்னிலை வகிப்பர்.
இன்றுகாலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பிளெனரி கூட்ட அறையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெறும். இதன் அதன்பின்னர் காலை 10.40 மணி தொடக்கம் 12 மணி வரை உயர்மட்ட பிரமுகர்களின் உரைகள் இடம்பெறும்.
இதில் ஒவ்வொரு நாட்டினதும் சார்பில் பங்கேற்கும் உயர்மட்டப் பிரதிநிதிக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தொடக்க அறிக்கையை வெளியிடுவார்.
மதியஉணவை அடுத்து பிற்பகல்12.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். பிற்பகல் 2.30 மணிவரை நடைபெறும் இந்த விவாதத்தை அடுத்து மீண்டும் உயர்மட்டப் பிரமுகர்களின் உரைகள் இடம்பெறும்.
இந்நிலையில், இலங்கை சார்பாக சார்பில் உரையாற்ற அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது உரைக்கு 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் நிலை குறித்து சுருக்கமாக விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இன்று உயர்மட்டப் பிரமுகர்களின் உரையுடன் நிறைவடையும் கூட்டத்தொடர் வாரத்தில் 5 நாட்கள் வீதம் நான்கு வாரங்களுக்கு இடம்பெறவுள்ளது. இதன்போதே, அமெரிக்கா தலைமையில் இலங்கைக்கெதிரான தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேரவைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை மார்ச் 15 ஆம் திகதியே சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
Photo
இன்றைய உலக ஒழுங்கை ஒட்டித்தான் தமிழ்த் தேசியம் பயணிக்கவேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) கிளை
ஐ.நா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு. மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சி என்ற காரணத்தால் இந்த இரண்டு பிரிவிலும் கலந்துகொள்ள முடியாது என த.தே.கூ (கனடா) கிளை ஒரு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
ஊடகங்களிற்கும் புலம்பெயர்ந்த மக்களிற்கும் அது விடுத்துள்ள அறிக்கையில்,
உண்மையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா சென்றால் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற உண்மைக்கும் மேலாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜெனீவாவுக்குச் செல்வதைத் தவிர்த்தமைக்கான காரணங்களை மக்களிற்கு விளக்க விரும்புகின்றோம்.
எமது வரலாற்றில் முதல்முறையாக உலக நாடுகளில் ஒரு பகுதி எம்மை ஆதரிக்கிறது. தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் அவர்களது அரசியல் வேட்கைகளை சிறிலங்கா அரசு நிறைவு செய்யப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றன. உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை நாம் சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டும். சிறிலங்கா இப்போது அமெரிக்கா என்ற வல்லரசோடு மனிதவுரிமை விவகாரத்தில் ஐ.நா.வில் மோதுகிறது.
இந்த சிறீலங்கா – அமெரிக்கா பிளவானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராசதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இரண்டு தடவைகள் அமெரிக்கா வந்திருந்ததும், தமிழர் தரப்பாக அமெரிக்காவின் முடிவெடுக்கும் இராஜதந்திர மையத்தின் உயரதிகாரிகளோடு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தியது தமிழர்களின் வரலாற்றில் புதிய பரிமாணமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனிதவுரிமை அவைக்குச் செல்லாமைக்கு எதிராக இணையத்தளங்களிலும் செய்தி இதழ்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எம்மோடு தொடர்பு கொள்பவர்களில் பலர் ததேகூ இன் மீதுள்ள பற்றுக் காரணமாக ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மனிதவுரிமை அவைக்குச் செல்லவில்லை என்ற தமது ஆதங்கத்தை தெரியப்படுத்தியுள்ளார்கள்.
ஐ.நா. மனிதவுரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானமானது சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில ஆக்க அடிப்படையிலான பரிந்துரைகளைச் செயற்படுத்துமாறு கோரும் ஒரு தீர்மானமாகும். சிறீலங்காவின் இந்த நல்லிணத்துக்கான அறிக்கையைத் ததேகூ ஏற்கனவே நிராகரித்து விட்டது. இதுபற்றி 105 பக்க அறிக்கை மும்மொழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.
அமெரிக்கா போர்க்குற்ற விசாரணை பற்றிய அறிக்கையை கொண்டுவரவுள்ளது போன்ற ஒரு பிரமையை தமிழ் மக்களிடம் ஒரு தரப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. சிறீலங்காவின் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகளான
(1) வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சம் இராணுவத்தினர் அகற்றப்பட்டு சிவிலியன் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும்.
(2) போரின் போது அரச படைகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் சட்டப்படியான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
(3) ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள களையப்பட வேண்டும்.
(4) காவல்துறை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரிக்கப்பட வேண்டும்.
(5) புரையோடிப் போய்க்கிடக்கும் இனச் சிக்கலுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பன அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.
அமெரிக்க அரசின் தீர்மானத்தை ததேகூ ஒரு தொடக்கமாகக் கருதுகிறது. சிறிலங்கா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தத் தவறின் பன்னாட்டு சமூகத்தின் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என அமெரிக்கா சிறிலங்கா அரசை எச்சரித்துள்ளது கவனிக்கத் தக்கது.
இன்றைய உலக ஒழுங்கில் – புவிசார் அரசியலில் – அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது. ஒட்டித்தான் ஓடவேண்டும். அனைத்துலகம் என்பது முக்கியமாக அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளாகும்.
இந்த நாடுகளின் உதவி இல்லாமல், ஒத்தாசை இல்லாமல் எமது உரிமைகளைப் பெறலாம் என நினைப்பவர்கள் அந்த உத்தி அல்லது உத்திகள் எவை என்று தயவு செய்து சொல்ல வேண்டும். நாம் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமாகவும் நீதியாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் இருப்பதாக பன்னாட்டு சமூகம் கருத வேண்டும். சமகால உலக ஒழுங்குக்குச் சாத்தியம் இல்லாதவற்றைக் கேட்டுப் பயனில்லை.
இதன் காரணமாகவே, மேற்படி கூட்டத்தில் பங்கு கொள்ளும் 47 நாட்டுத் தூதர்களோடு தொடர்பு கொண்டு சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையையும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் துயரத்தின் பின்னான சகல சம்பவங்களையும் குறிப்பிட்டு. இது தொடர்பாகத் தமிழ்மக்கள் பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு த.தே.கூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.
உண்மை இவ்வாறிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனின் உருவப் பொம்மையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பின் பெயரில் ஏற்படுத்தப்பட்டு தமிழினத் துரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் கழுத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. சுலோக அட்டையில் போர் குற்ற விசாரணை எங்கே? எனக் கேள்வியும் எழுப்பப்பட்டு ஒரு பக்க சார்ப்பு ஊடகங்களினூடாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஒன்றியம் எனப் பல ஒன்றியங்கள் இயங்குகின்றன. பல நேரங்களில் இதில் எந்த ஒன்றியம் இப்படியான கீழ்த்தரமான செயலுக்குப் பொறுப்பு என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் “ழ”கர “ள”கர வேற்றுமை தெரியாத, தமிழ் மொழியைத் தெரியாதவர்களே இதை எழுதியுள்ளார்கள்.
பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிச் சிங்கள இராணுவமும் காவல்துறையும் காவலுக்கு நிற்கும் போது அதனையும் மீறி இலகுவில் யாரும் கழற்றி எடுத்துச் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கயிற்றினால் உயரமான மாடிக்கட்டடம் ஒன்றில் உருவப் பொம்மையை தொங்க விடப்பட்டிருப்பது இது உள்வீட்டு வேலை என்பதைக் காட்டுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வட்டாரத்தோடு தொடர்பு கொண்டு விசாரித்ததில் இபிடிபி டக்ளஸ் தேவானந்தாவின் கைக்கூலி மாணவர்களே இந்தக் கைங்கரியத்தை செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. அதன் காரணமாகவே அந்த உருவப் பொம்மையை சிங்கள இராணுவமோ சிங்களக்காவல்துறையோ அகற்றாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
போர் விசாரணையை பற்றிய ஒரு வார்த்தைப் பிரயோகத்தை ஐ.நா. மனிதவுரிமை அவையின் தலைவரோ, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளின் பிரதிநிதிகளோ உச்சரிக்காமல் போரின் பின்னானநல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மையப்படுத்தும் இவ் வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி போர் குற்ற விசாரணை எங்கே என்ற கேள்வியை எழுப்பும் இந்த கீழ்த்தரமான பரப்புரைக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக ஊகித்துக் கொள்ளலாம்.
ததேகூ எடுத்த முடிவு திரு. சம்பந்தன் திரு. சுமந்திரன் எடுத்தமுடிவு என்பது உண்மையல்ல. சுமந்திரன் மட்டும் அதற்குப் பொறுப்பல்ல. ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக) அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ததேகூ இன் பொதுச் செயலாளர் திரு மாவை சேனாதிராசா, கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் திரு சுமந்திரன் மீது மட்டும் சேறுவாரிப் பூசப்படுகிறது. இந்த முயற்சிக்கு உள்நோக்கம் இருக்க வேண்டும்.
முடிவாக ததேகூ இன் பேச்சாளர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ததேகூ இன் முடிவு திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் எடுத்த முடிவு என சொல்லிய கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம். கூட்டமைப்போடு கருத்து வேறுபாடு இருந்தால் அதனை நாலு சுவர்களுக்கு உள்ளே விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு வெளிப்படையாகமாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பது மகிந்த ராசபக்சேயின் பொறிக்குள் நாமாகவே விழுவது போன்ற சூழலை ஏற்படுத்தி விடும் என்ற கருத்தையும் இவ்வேளையில் பதிவு செய்ய விரும்புகிறோம். ஈழத்தமிழர்களின் வேட்கை நிறைவேறுகிற சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழர்களின் தலைமையை பிரித்து அவர்களை இரண்டுபட வைப்பதன் மூலமே சிறீலங்கா வெற்றிபெற்று வருகிறது. இவ்வாறு தமிழர்களைப் கூறுபோடப் பயன்பட்டவர்களுக்கு பட்டம், பதவி வழங்கி அமைச்சர்களாக்கியும் முதலமைச்சர்களாக்கியும் சிறீலங்கா மகிழ்வித்து வருகிறது. இந்த துரோக வரலாறு இனியும் தொடர நாம் அனுமதிக்கக்கூடாது என த.தே.கூ. கனடாக் கிளை தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐநா சபையிடம் நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட மூவர்நவநீதம்பிள்ளையிடம் மகஜர் கையளிப்பு!
திங்கட்கிழமை, 05 பங்குனி 2012 21:48
ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.
இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி கைகோர்த்த அமெரிக்க வாழ் தமிழக தமிழர்கள்! ஞாயிற்றுக்கிழமை, 04 பங்குனி 2012 23:23
ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும்ஒன்றுபட்டு தொடர் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.வொஷிங்டன் இராஜாங்கத் திணைக்களத்துக்கு முன்னால் பெப்ரவரி 24ம் முதல்நேற்று முன்தினம் வரை தொடர் அமைதி வழியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இதனை ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வொஷிங்டன் இராஜாங்கத் திணைக்களத்துக்கு முன்னாலான தமிழ் அமைப்புக்களின் ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் முடிவுறுகிறது.
சிங்கள இனவாத யுத்தத்தின்போது மே 2009இல் சிறிலங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாக, கடந்த மாதம் 24ம் திகதிதொட்டு இம்மாதம் 2ம் திகதி வரையில் அமைதி வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஈழத்தமிழர், தமிழ் நாட்டுத்தமிழர் அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள், வொஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் பதாகைகளைத் தாங்கியவாறு நாள் தோறும் திரண்டு நின்று அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி வந்துள்ளனர்.
ஐநா சபையிடம் நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட மூவர்நவநீதம்பிள்ளையிடம் மகஜர் கையளிப்பு!
ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.
இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி கைகோர்த்த அமெரிக்க வாழ் தமிழக தமிழர்கள்! ஞாயிற்றுக்கிழமை,
ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும்ஒன்றுபட்டு தொடர் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.வொஷிங்டன் இராஜாங்கத் திணைக்களத்துக்கு முன்னால் பெப்ரவரி 24ம் முதல்நேற்று முன்தினம் வரை தொடர் அமைதி வழியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இதனை ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வொஷிங்டன் இராஜாங்கத் திணைக்களத்துக்கு முன்னாலான தமிழ் அமைப்புக்களின் ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் முடிவுறுகிறது.
சிங்கள இனவாத யுத்தத்தின்போது மே 2009இல் சிறிலங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாக, கடந்த மாதம் 24ம் திகதிதொட்டு இம்மாதம் 2ம் திகதி வரையில் அமைதி வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஈழத்தமிழர், தமிழ் நாட்டுத்தமிழர் அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள், வொஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் பதாகைகளைத் தாங்கியவாறு நாள் தோறும் திரண்டு நின்று அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி வந்துள்ளனர்.
நாள்தோறும் ஒவ்வொரு மாநிலத்தினைச் சேர்ந்த தமிழர்கள் ஏற்பாடுகளுக்கான பொறுப்புக்களை மேற்கொண்டு பனிப்பெய்கை, மழை, குளிர்எதையும் பொருட்படுத்தாது தமது நாளாந்தக் கடமைகளைத் துறந்து, தமிழினத்துக்கான தம்கடமைகளைச் சரிவரச் செய்ய முயன்றுள்ளனர்.
அவர்கள் எதிர்பார்த்தவாறே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் ஆர்ப்பாட்டத்தை உற்றுக் கவனித்தே வந்துள்ளது.
முதல் நாளன்றே திணைக்கள அலுவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன், அனுதாபத்துடன் அணுகி நின்று அவர்களின் வாய்மொழிச் செய்திகளையும் பதாகைச் செய்திகளையும் பதிந்துகொண்டு சென்றுள்ளனர்.
இறுதி நாளாகிய கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் முடிவுக்குவர இருப்பதைத் தெரிந்து கொண்ட தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலாளர் உரொபேர்ட் பிளேக் அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோருடன் அளவளாவி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி அவர்களுக்கு விளக்குமாறு தனது உதவியாளர் ஒருவரை அனுப்பி வைத்தார்.
பிளேக் அவர்களின் செய்தியைத் தாங்கி வந்த உதவியாளர், பங்கு பற்றியோர்களால் இராஜங்கத் திணைக்களச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் அம்மையாருக்கெனத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவையும் பெற்றுகொண்டதுடன் தமிழ் மக்கள் விடயத்தில் அமெரிக்கா உறுதியுடன் செயற்படுமெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இறுதி நாள் பெருவெற்றியோடு வீடு திரும்பியது, பங்குபற்றியோர் அனைவருக்கும் பெருமகிழ்வாக அமைந்ததுடன், பட்டசிரமங்களையும் முற்றாக மறக்கச் செய்துவிட்டது எனலாம். இவ்வாறு ஏற்பாட்டுக்குழுவினரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thanks
நினைத்ததை நடத்தியே முடிப்பவன்:
நான் என்ற கொள்கையிலேயே அமெரிக்காவின் இலங்கை மீதானவியூகம்
ஜெனீவாவில் காத்திருக்கிறது பொறி
- “………………….நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்றகொள்கையிலேயே அமெரிக்கா இப்போதும் வியூகம் வகுத்துச் செயற்பட்டு வருகிறது. சதாம் ஹுசைன், ஒசாமா பின்லேடன், மும்மர் கடாபி ஆகியோரின் வீழ்ச்சிக்காக நீண்ட நாள் காத்திருந்து பொறி வைத்ததும் இந்த அமெரிக்காதான். அப்படியான ஒரு அசட்டுப் பலம்கொண்ட அமெரிக்கா இப்போது இலங்கைக்கு எதிராகத் தூக்கியிருக்கும் பிரேரணையும் இலகுவில் தோற்கடிக்க முடியாதது என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் அதற்கான முன்னாயத்தங் களை இராஜதந்திர அணுகுமுறைகளை ஏற்கனவே மேற்கொள்ளாமல் அது ஒருபோதும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கவேமாட்டாது. ஒட்டு மொத்தத்தில்
- இந்தக் கூட்டத் தொடர் இலங்கை அரசுக்கு ஆப்புத்தான். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு பதிலாக, அடையாளம் தெரியாத சடலங்கள் அங்கங்ககே மீட்கப்படு வதுடன், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் மக்கள் கூட்டங்கள் மீதும், கருத்துச் சுதந்திரம் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறன. இதடினப்படையில் பார்க்கும் போது, இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கோரும் யோசனை நிறைவேற்றப்படுவது தமக்கு ஏற்படும் மரண ஆபத்து என ராஜபக்ஷ நிர்வாகம் தீர்மானித்துள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வது சிரமமான காரியமல்ல. தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அரச தலைவர் ஒருவர் அஞ்ச நேர்ந்த யுகம் ஒன்றும் இன்னும் இருக்கின்றதா?……………….”.
– இன்போதமிழ் குழுமம் –
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் – ஜெனிவாபேரணிக்கு ஆதரவ
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் பேரவைக் கூட்டம் கடந்த 27-2-2012 அன்று ஜெனிவாவில் கூடியுள்ளது. இக்கூட்டம் வழக்கத்திற்கு மாறாக, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.
அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இராஜபக்சே கும்பலின் மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டினை தீர்மானமாக முன்மொழிவதில் அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் முனைப்பாக உள்ளன. இதனால் நிலை கலங்கிப்போயிருக்கும் சிங்கள இனவெறியர்கள் தங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே நடந்த சிங்கள அரசுக்கு எதிரான இத்தகைய முயற்சியை இந்தியா, சீனா, கியூபா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு முறியடித்துள்ளன. இது ஈழத்தமிழர்களுக்கும், ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் இந்திய அரசு இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும்.
தற்போது, மீண்டும் இந்திய அரசு தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதைக் கைவிட வேண்டும். மாறாக, நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானத்திற்கு ஆதரவளிக்க இந்திய அரசை வலியுறுத்துகிற வகையிலும், தீர்மானத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைக் கோரி வருகிறது.
5-3-2012 அன்று ஜெனிவாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்தும் பேரணியை ஆதரிக்கிற வகையிலும், அதே நாளில் (5-3-2012) விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எனது தலைமையில் (தொல்.திருமாவளவன்) நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
————————————————————————————————————————————————
போர்க்குற்றவாளி ராசபக்சேவுக்கு எதிராக தமிழர்கள் மும்பையில் பேரணி
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மும்பையில் தமிழர்கள் பேரணியை நடத்தியுள்ளனர்.
சிங்கள அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கோரியும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், மும்பை தமிழர்களால் இப்பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேடப்படும் குற்றவாளி ராஜபக்ச என்ற வாசகம் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்ததுடன், தேடப்படும் குற்றவாளி ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டுமென்று கோசங்களையும் முழங்கியவாறு சென்றனர்.
இலங்கையை சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை இவ் விடயம் 07. 03. 2012, (புதன்), தமிழீழ நேரம் 12:56க்கு பதிவு செய்யப்பட்டது
இலங்கையை ஐ.நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது.
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் நடந்த இறுதிப்போரின் போது ஏராளமான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை அரசு மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கான விசாரணையை ஐ.நா சபை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் காட்சி பேரணி நடத்தியுள்ளது.
சென்னையில் எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணியை இயக்குனர் மணி வண்ணன் ஆரம்பித்து வைத்தார். இதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சிறப்புரையாற்றினார்.
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்படக்கூடாது. இலங்கையை சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று தனது உரையில் சீமான் தெரிவித்தார்
நேற்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியனாடுகள் சபை முன்பாக அலையெனத் திரண்ட மக்கள் கைகளில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறீலங்கா அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, ஆகியோரின் உருவப் படங்களையும், அவர்களின் வளிநடத்தலில் படுகொலைசெய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் தாங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியவறு ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்கக் கோரி ஓங்கிக் குரல் எழுப்பினர்.
இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக தமிழ்ர்கள் அல்லாதோர் அதிகளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தனர். அத்தோடு தொடர்ந்தும் தமிழ்ர்கள் ஜனநாயக முறையில் சர்வதேசத்திற்கு அழுத்தங்கள்ஐக் கொடுக்கவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டனர்.
பெல்ஜியத்தில்இருந்து 30 நாள் தொடர்பயணத்தின் இறுதியாக நேற்று ஐ.நா முன்றலை வந்தடைந்தவர்களை வரவேற்று தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முதலில் தமிழ்ர்களின் விடுதலை வாழ்விற்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் தம்முயிரை தீக்கிரையாக்கிய 20 தியாகப் பேரொளிகளுக்கும் தீபம் ஏற்றப்பட்டு மலர்மாலை அணீவிக்கப்பட்டது.
சுவிஸ் தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இன்றைய காலத்தின் தேவை அறிந்து சர்வதேசத்திடம் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டியதன் தேவையையும் உணர்ந்த தமிழ்ர்களாக வேறுபாடுகள் எதுவும் இன்றி பெரும்பாலான பல தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்குபற்றியிருந்த்அமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகள், மற்ரும், உரைகளைத் தொடர்ந்து மாலை 5:20 மணிக்கு தேசியக் கொடி இறக்கப்பட்ட்உ நம்புக்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.
ஐ.நாவின் மனிதஉரிமைகள் பேரவையின் முன் நிறுத்தப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தண்டிக்கப்படும் வரை இலங்கைக்கெதிரான போராட்டம் தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கெதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை எல்லாம் இந்திய மத்திய அரசு உதாசீனப்படுத்தியது. இதன் காரணமாகவே ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், யுத்தத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் முள்வேளி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என பல ஆயிரம் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் விசாரிக்க அமைக்கப்பட்ட அனைத்துலக அளவிலான மனிதஉரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் எல்லாம் முடக்கப்பட்டன.
இலங்கையில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை இந்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மெளனம் சாதித்து வருகின்றது. அந்த மெளனம் கலைக்கப்பட வேண்டும்.
போர்க்குற்றவாளிகள் அனைத்துலக மனிதஉரிமை ஆணையத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.