மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 217 ஆக உயர்ந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின. தலைநகர் மெக்ஸிகோ சிட்டிக்குத் தெற்கே உள்ள மோர்லாஸ் மாகாணத்தில் மட்டும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.