அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள சர்ச்சில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் நாஷ்விலி என்ற பகுதியில் உள்ள சர்ச்சில் நேற்று காலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர், திடீரென சர்ச்சில் நுழைந்தான். அவன் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினான். இதனால் சர்ச்சில் இருந்தவர்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓடினர்.
இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் பலியானார். துப்பாக்கியால் சுட்டவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சர்ச்சில் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.