அமெரிக்காவில் பள்ளிக்காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள் 43 வருடங்கள் கழித்து வயதான காலத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள்

272

அமெரிக்காவில் பள்ளிக்காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள் 43 வருடங்கள் கழித்து வயதான காலத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள்.Howard Foster, Myra Clark ஆகிய இருவரும் ஓகியோவில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர்.

பள்ளிக்காலத்தில் நெருங்கி பழகியதன் மூலம் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டதால் காதலர்களாக மாறியுள்ளனர்.இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ஒரே பிரச்சனை அமெரிக்காவில் நிலவி வரும் இனவெறி தாக்குதல் தான்.

அமெரிக்காவில் இன்று வரை கருப்பினர்களுக்கு எதிரான தாக்குதல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, இந்த தாக்குதலானது 1969 ஆம் காலகட்டத்தில் அதிகமாக இருந்துள்ளது.

Howard கருப்பினத்தை சேர்ந்தவர், Myra Clark வெள்ளையினத்தை சேர்ந்தவர். இவர்களின் மனம் ஒத்துப்போனாலும், இனவெறியின் காரணமாக தங்களால் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ற சந்தேகம் இவர்களுக்குள் இருந்துள்ளது.

இதன் காரணமாக இவர்கள் பிரிய நேரிட்டது. அதன்பின்னர் கல்லூரி, வேலை என வெவ்வேறு பாதைகளில் இருவரும் பயணிக்க ஆரம்பித்தனர்.

இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர்.இந்நிலையில் இவர்கள் பிரிந்து 43 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒரு நிகழ்ச்சியில் வைத்து இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர்.

அந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் பழக ஆரம்பித்தனர், உதிர்ந்த காதல் மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும் மலரவே கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து Howard கூறியதாவது, ஒருமுறை Myra – வை விட்டு நான் விலகிசென்றது போதும், தற்போது அவளின் கையை இறுகபற்றியுள்ள நான் இறுதிவரை அவளுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.

SHARE