சீனாவில் ஞாபக மறதியால் அவதிப்படும் தனது தாயை தனியாக விடமுடியாத காரணத்தால் தன்னுடனேயே கல்லூரிக்கு அழைத்து செல்லும் பேராசிரியரின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
பேராசிரியர் ஹூ மிங் என்பவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார், இவரது வயது முதிர்ந்த தாய்க்கு ஞாபக சக்தி பிரச்சனை.
தனது தந்தை இறந்துவிட்ட காரணத்தால் தனியாக இருக்கும் தாயை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில், ஆசிரியரின் தாய் கல்லூரிக்கு வரும்போது அனைவரும் அவரை வியப்பாக பார்த்துள்ளனர். அதன்பின்னர் கல்லூரி மாணவர்களுக்கு அவர் பழகிப்போனவர் என்பதால், மாணவர்கள் யாரும் எதனையும் கண்டுகொள்வதில்லை.
இதுகுறித்து பேராசிரியர் ஹூ மிங் கூறியதாவது, எனது தாயால் என்னை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நான் பாடம் எடுக்கும்போது வகுப்பறையின் ஓரத்தில் அமர்ந்துகொள்வார்.
அவருக்கு தூக்கம் வந்தால் தூங்கிவிடுவார், இல்லையென்றால் பாடங்களை கவனிப்பார். ஆள் வைத்து பார்த்துக்கொள்ளலாமே என பலரும் கேட்டார்கள், அதற்கு வாய்ப்பே இல்லை.
அவரை என்னால் மட்டுமே பார்த்துக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு கல்லூரி நிர்வாகம் ஆதவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பேராசிரியரின் இந்த செயலை சீன மக்கள் பாராட்டி வருகின்றனர்