ஜேர்மன் பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் மோதல் ….!

233

ஜேர்மன் பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, தங்கொட்டுவை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹால்தடுவன பகுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 60 வயதான நபருக்கும், கம்பளை பகுதியைச் சேர்ந்த 37 வயதான இலங்கையருக்கும் இடையில், நேற்று மாலை தங்கொட்டுவை பகுதியில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த ஜேர்மன் பிரஜை இலங்கைப் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, வாகன நெரிசல் தொடர்பிலான வாக்கு வாதத்தின் போதே, தன்னை இலங்கையர் ஒருவர் தாக்க முற்பட்டதாகவும், இதனால் தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் பிரஜை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட ஜேர்மன் பிரஜை தாக்கியதால், தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என, இலங்கைப் பிரஜை பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

SHARE