செங்கல்பட்டு ஏரியாவில் விவேகம் அடைந்த நஷ்டம், எத்தனை கோடி? முழு விவரம்

209

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் விவேகம். தமிழகத்தில் இதுவரை வந்த படங்களிலேயே அதிக திரையரங்குகளில் விவேகம் தான் ரிலிஸாகியது.

இதில் தமிழகத்தில் நம்பர் 1 அதிகம் வசூல் வரும் இடம் செங்கல்பட்டு ஏரியா தான், அந்த பகுதியில் விவேகம் ரூ 11 கோடிக்கு விற்கப்பட்டதாம்.

தற்போது வரை இப்படத்தின் ஷேர் ரூ 8.25 கோடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இதனால் 2.5 கோடிகளுக்கு மேல் அப்பகுதியில் விவேகம் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், சென்னையில் எப்படியோ போட்ட பணத்திற்கு பாதிப்பு இல்லை என்ற நிலையை விவேகம் அடைந்துவிட்டது.

திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலும் இதே நிலைமை தான், மற்ற பகுதிகள் குறித்து தெரியவில்லை, மேலும், செங்கல்பட்டில் உள்ள சில திரையரங்குகள் ஆல்டைம் டாப்-5 வசூலுக்குள் விவேகம் வந்தது என்றும் கூறினார்கள்.

இதனால், எதை நம்புவது என்றே தெரியவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது, விநியோகஸ்தர்களே வாய் திறந்தால் தான் உண்மை வெளிவரும்.

SHARE