மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

254

 

 

ரக்கான் அல்லது அரக்கன் என்று போர்துகீசியர்களாலும் அதே பெயரில் பிரிட்டிஷ்காரர்களாலும் அழைக்கப்பட்ட பர்மாவின் ராக்கைன் பிரதேசம் ராக்ஷஸபுரா என்று சமஸ்க்ருதத்திலும்  ராக்கபுரா என்று பாலி மொழியிலும் அழைக்கப்பட்ட பிரதேசமாகும். ராக்ஷஸன் என்கிற பெயர் தமிழில் அரக்கன் என்று அழைக்கப்படும் அதிலிருந்து இந்த பெயரை அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன். பன்னெடுங்காலமாக பர்மாவில் தமிழர்களின் குடியிருப்பும் வியாபாரமும் செழித்து விளங்கியது என்பது வரலாறு.

மியான்மர் என்று அண்மைக்காலங்களில் பெயர் மாற்றம் பெற்ற பர்மா என்கிற நாடு, மேற்கில் வங்கதேசத்தையும் வடக்கிலும் வடமேற்கிலும் மிசோரம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டது. இதன் பகுதியாக இருந்த சிட்டகாங் இன்று வங்கதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பர்மிய சுதந்திரத்திற்கு பின்னர் ராக்கைன் பிரதேசம் பர்மாவின் ஒரு அங்கமாக மாறியது.

மகாமுனி புத்தர் ஆலயம், மாண்டலே, மியான்மர்

புத்தர் இந்த ராஜ்யத்திற்கு வந்ததாக ஒரு ஐதீகம் உண்டு. அதோடு ஒரு பெரும் புத்தர் சிலையும் இங்கு இருந்தது. தான்யவதி என்ற அரக்கான் ராஜ்ய தலைநகரத்திற்கு பொயு.மு.* 554ல் பகவான் புத்தர் வந்ததாகவும் அப்போது அதை ஆண்ட சந்திர சூரியன் என்கிற அரசனிடம் தன்னை ஒரு சிலையாக வடிக்க சொன்னதாகவும் ஒரு தொன்மம் இங்கு உண்டு (* பொயு.மு . – பொதுயுகத்திற்கு முன், BCE). அது தான் மகாமுனி சிலையாக இருக்கிறது. அரக்கான் பகுதி ராக்கைன் இன பூர்வகுடிகளால் ஆனது. இங்குள்ள ரோஹிங்கியா எனப்படும் வங்க தேசத்தில் இருந்து அகதிகளாகவும் கூலிகளாகவும் வந்த மக்கள் கடந்த 50இல் இருந்து 100 வருடங்களுக்குள் வந்தவர்களாவர். பர்மாவின் இஸ்லாமியர்கள் முகலாயர்கள் காலத்தில் இங்கு வந்து பர்மிய பெண்களை மணந்து அங்கேயே இருப்பவர்கள். அவர்கள் ரொஹிங்கியாக்கள் அல்ல, பர்மிய முஸ்லிம்கள். அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

1950, 60 களில் அரக்கான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் முஜாஹிதீன்கள் என்கிற இஸ்லாமிய படை செயல்பட்டு வந்தது. ராக்கைன் மாநிலத்தின் இந்த பகுதியை கைப்பற்றி வங்கதேசத்துடன் சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த முஜாஹிதீன்கள் தங்களை ரோஹிங்கியா என்று அறிவித்து கொண்டனர். இந்த ரோஹிங்கியாக்களுக்கு பெரும்பாலும் பர்மிய மொழியோ அல்லது ராக்கைன் மொழியோ தெரியாது. இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்கள் பிரமாதமாக பர்மிய மொழி பேசும்போது, இவர்களுக்கு பேச தெரியாது. இவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.

வங்கதேச ரொஹிங்கியாக்களின் குடியேற்றத்தினாலும் அங்கிருந்து தொடர்ச்சியான மக்கள் வருகையினாலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை, உணவு, தனித்தன்மை போன்றவற்றை இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகளாக ஆகிவிடுவோம் என்கிற பயம் ராக்கைன் மக்களுக்கு இருந்தது. அந்த பயமும் நியாயம் தான். ஏனென்றால் அதை நாம் காஷ்மீரில் நிதர்சனமாக பார்த்து விட்டோம்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ராக்கைன். அதனால் பலர் கிராமங்களை காலி செய்து விட்டு பர்மாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். அந்த காலத்தில் தான் தற்போது வங்கதேசமாக உள்ள பிரதேசத்திலிருந்த முஸ்லிம்கள் இந்த பகுதிகளுக்கு குடியேறி இருக்கிறார்கள்.

தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது.  புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்.

2012ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். இன்று 10 லட்சம் பேருக்கு மேல் ரொஹிங்கியாக்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அதில் இந்தியாவில் 40000 பேருக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களோ நானோ சென்றால் ஒரு வீடு கட்டியோ ஒரு குடிசை போட்டோ தங்க முடியாத காஷ்மீரில், இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்திற்காக குடியேறிக்கொள்ள ரொஹிங்கியாக்கள் உமர் அப்துல்லா அரசால் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிர். சென்னையில் கூட சிலர் இருக்கிறார்கள். அது சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தான் வெளிச்சம்.

அரக்கான் ரோஹிங்கியா மீட்சி படை என்ற பெயரில் ஒரு ராணுவத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அது அவ்வப்போது ராக்கைன் இன பூர்வகுடிகளை கொல்லுவது தாக்குவது சூறையாடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. பின்பு வங்கதேசத்தில் சென்று புகுந்து கொள்கிறார்கள். லஷ்கர், அல்கயிதா போன்ற தீவிரவாத படைகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக புகுந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கட்டாயமாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். முடிந்தால் வங்கதேசமோ,பாகிஸ்தானோ அல்லது சவூதி, குவைத் போன்ற நாடுகளோ இவர்களுக்கு தஞ்சம் அளிக்கட்டும் என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு.

நோபல் அமைதி விருது வென்ற பர்மிய தலைவர் ஆங்சான் சூகி நடக்கும் வன்முறையை வேடிக்கை பார்க்கிறார் என்று மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. ஆனால், எங்கள் ஊரை காப்பாற்றாத உங்கள் அமைதி பரிசு எனக்கெதற்கு என்று எதைப்பற்றியும் கவலையின்றி இருக்கிறார் அவர்.  அவரின் கட்சியான தேசிய ஜனநாயக அணி தான் இன்று அங்கு ஆட்சியில் உள்ளது. உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது” என்று பிரச்சாரம் செய்யும் வெள்ளை முற்போக்கு கும்பல்,  பர்மாவின் ”பவுத்த தீவிரவாதம்” என்று பச்சையாக எழுதுகிறது. அதன் இந்திய கிளைகள் இங்குள்ள ஊடகங்களில் அதை அப்படியே வழிமொழிந்து வாந்தியெடுக்கின்றன.  மனிதாபிமானம், அகதிகள் ஒப்பந்தம், ஐநா என்றெல்லாம் அதற்கு சால்ஜாப்பு சொல்லப்படுகிறது.

உங்கள் உளறல் எங்களுக்கு கூந்தலுக்காச்சு என்று பர்மா இவர்களை முற்று முழுதாக வெளியேற்றும் முயற்சியில் இருக்கிறது. அதை இந்தியாவும் சீனாவும் ஆதரிக்கின்றன. இதன் முடிவு என்னவாக இருக்கும்,  இதனால் நமக்கு என்ன சாதக பாதகங்கள் இருக்கும்,  மேற்குலகின் போக்கு எப்படி மாறும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE