இந்த வருடத்துக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகளான ஜெப்ரி ஹோல், மைக்கேல் ரொஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோர் வென்றெடுத்துள்ளனர்.
மனித உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் உடல் கடிகாரம் (உயிரியல் கடிகாரம்) குறித்து ஆய்வை மேற்கொண்டமைக்காகவே அவர்களுக்கு மேற்படி பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு சபை தெரிவித்தது.மனித உடலுக்குள் இயங்கும் மேற்படி உடல் கடிகாரமானது அவர்களது உணர்வுநிலை, உடல் வெப்பநிலை உள்ளடங்கலாக அனைத்தையும் பாதிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆய்வில் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.