தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தேங்காய்த்துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒன்று
பொட்டுக்கடலை – 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
மிளகாயத்தூள் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
பொட்டுக்கடலை, கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், பட்டை, சோம்பு, கசகசா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கொத்துக்கறியைச் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து கறி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த பொட்டுக்கடலை, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் தட்டிய கறி உருண்டைகளைச் சேர்த்து சிவக்க பொரித்து எடுத்துப் பரிமாறவும்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக சாப்பிடக்கூடிய சுவையான மட்டன் கீமா வடை ரெடி