தீபாவளியை வேறலெவலில் கொண்டாட விஜய் ரசிகர்கள் பக்கா பிளான் போட்டு வருகின்றனர். படம் வருமா வராதா என்ற பயத்தை போக்கி படத்தை பிரம்மாண்டமாக வரவேற்க தயாராகி விட்டனர்.
இந்த நிலையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், என்ன ஒரு ஸ்பெஷலான தினம், விஜய்யை சந்தித்த நாள். ரசிகர்கள் தான் என்னுடைய பலம். அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், அன்பிற்காகவும் தான் நான் வியர்வை சிந்தி உழைக்கிறேன் என்று விஜய் கூறியதாக பதிவு செய்துள்ளார்.