இலங்கை_யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி இந்தோனேசியா வந்து பல வருடங்களாக தமது வாழ்வைக் கேள்விக்குறியாக்கிய நிலையில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து இந்தோனேசியா மெடான் பகுதியில்
அகிம்சை முறையில் அமைதியாக இருக்கும் முகாமிலேயே நேற்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கோரிக்கைகள்:
1,அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் மூன்றாங்கட்ட நாடுகளுக்கு விரைவாக மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும்.
2,உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை உடனடியாக வேறு குடியேற்ற நாடுகளுக்கு குடியமர்த்தி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
3,நாட்டில் ஆபத்தை எதிர் நோக்கியுள்ள அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்.
4,குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பட்ட நிலையில் தமது உரிமைக்காக அகிம்சை முறையில் போராடிய ஈழத் தமிழ் உறவுகளில் இருவர் (நாதன் பார்த்தீபன் ,மற்றும் அவரது சகோதரர்) குடிவரவு(Immigration) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுப்பு சிறையினுள் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவரது சகோதரனும் அங்கு நோய்வாய்ப்பு அதிகமாக இருக்ககூடிய இடத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது மிகவும் மனிதத்தன்மை அற்ற செயல்.
எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவழிப்பதோடு இவர்களின் விடுதலைக்கு கரம் கோர்ப்போம்.
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கவனத்தில்கொள்ள( Humanrights) வேண்டுகின்றோம்.
(UNHCR Head office:swige@unhcr.org,
INSPECTOR OF UNHCR:inspector@unhcr.org,
UNCHR INDONESIA: insja@unhcr.org,
IOM :iomjakarta@iom.int,)
#இந்த_மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் அழுத்தங்களை தெரிவிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மனிதநேயம்கொண்ட ஆருயிர் உறவுகளே மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் அழுத்தங்களைப் பதிவுசெய்யுங்கள்.
தொடர்பிற்கு +6281324869193,
EMAIL: refugeestamil@gmail.com