தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கேரளா பக்கம் போனால் தளபதிக்கு இருக்கும் மவுசு தலக்கு கிடையாது. வெளியே தலைகாட்டாமல் இருந்தாலும் வெண்சாமரம் வீச கேரளாவும், ஆந்திராவும் தமிழ்நாடு இல்லையே.
மெர்சலின் தெலுங்கு பதிப்பை தமிழ் பதிப்பு வெளியாகும் அதே தீபாவளிக்கு கொண்டுவர மெனக்கெடுகிறார்கள். இந்நிலையில் மெர்சலின் தெலுங்கு உரிமையை படா தயாரிப்பாளர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல். தெலுங்கு ரைட்ஸ் – ஆந்திராவும், தெலுங்கானாவும் சேர்த்து 42 கோடிகளுக்கு வியாபாரமானதாக செய்தி கசிந்துள்ளது.
துப்பாக்கியின் தமிழ்நாடு ரைட்ஸே இந்தளவுக்குதான் போனது. இப்போது மெர்சலின் தெலுங்கு ரைட்ஸ் 42 கோடிகளை எட்டியுள்ளது. அப்படியானால் தமிழக உரிமை…?
அங்குதான் விஜய்யின் மதிநுட்பம் வேலை செய்திருக்கிறது. வெளியாட்களுக்கு கொடுத்தால் எத்தனை கலெக்ஷன் வந்தாலும் நஷ்டக்கணக்கு காட்டுவார்கள் என்பதால் படத்தை தயாரித்த தேனாண்டாஸ் ஸ்டுடியோஸையே வெளியிட சொல்லியிருக்கிறார்.