‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ – யுவன் இசையில் அனிருத் பாட்டு

218

 

புதுமுகம் சினீஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடித்துள்ள படம் ‘பலூன்’. ஹாரர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை 70 எம் எம் நிறுவனமும், பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா மூலம் மிகவும் பாப்புலரான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வார்த்தையை மையப்படுத்தி ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடலை ‘நெருப்புடா…’ புகழ் அருண் ராஜா காமராஜ் எழுத்தியுள்ளார்.

இந்தப் பாடல் குறித்து இயக்குநர் சினீஷ் கூறுகையில், ‘‘இந்தப் பாடல் படத்தின் கதைக்கு தேவையில்லை என்றாலும், படத்தின் புரமோஷனுக்காக புதிய முயற்சி ஒன்றை செய்து பார்க்க ஆசைப்பட்டோம். அப்படி உருவானதுதான் இப்பாடல்.

காதலின் பலம், பலவீனங்களைக் கூறுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு அனிருத் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என விரும்பினோம். அவரின் டேட்ஸுக்காக இத்தனை நாள் காத்திருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன் அந்தப்பாடலை வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டோம்!’’ என்றார்.

இந்தப் பாடல் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘பலூன்’ திரைப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ‘வேலைக்காரன்’ படத்துடன் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

SHARE