ரஜனிக்காய் காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

204

 

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இவரை நம்பி எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் போட தயாராக இருக்கிறது சில தயாரிப்பாளர் கூட்டம்.
தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, இந்தியிலும் மிகவும் தேடப்படும் இயக்குநராக இருக்கும் முருகதாஸ் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிவரும் ஸ்பைடர் படத்தை இயக்கிவருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை அடுத்து விஜய் படத்தை இயக்கவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும், அவர் ஓகே என்றால் ஷூட்டிங் போகலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகதாஸிடம் கேட்டபோது, “நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவருக்காக கதை உருவாக்குவது எனக்கு கஷ்டமான விஷயம் இல்லை. ஒரு மாதத்துக்குள் அவருக்கேற்ற ஒரு கதையை என்னால் உருவாக்க முடியும். ஏற்கெனவே ஒரு கதையும் வைத்துள்ளேன். அவர் சரி என்றால் போதும். ரஜினியுடன் இணைந்து படம் பண்ணும் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன்,” என்றார்.
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கும் சூழலில், முருகதாஸுக்கு படம் பண்ணுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

SHARE