மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

496

மன்னார் மாவட்டம்,  வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே உயிரிழந்தவராவார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மேசன் வேலை செய்து முடித்து விட்டு தனது வீட்டிற்குச் சென்று வீட்டு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது திடிரென அவரது காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகளால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் என்ன காரணத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப் படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE