அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகள் தீபாவளி வாழ்த்து..!!

248

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார். அதில், அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக அளவிலான தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் இவாங்கா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE